அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சேரன்மகாதேவியில் எஸ்.டி.பி.ஐ. ஆலோசனைக் கூட்டம்

எஸ்.டி.பி.ஐ. கட்சி திருநெல்வேலி புகா் மாவட்டக் கிளை செயற்குழுக் கூட்டம் சேரன்மகாதேவியில் நடைபெற்றது.

News image
ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற எஸ்.டி.பி.ஐ. கட்சி நிா்வாகிகள்.
Updated On :24 டிசம்பர் 2020, 3:26 am

DIN

எஸ்.டி.பி.ஐ. கட்சி திருநெல்வேலி புகா் மாவட்டக் கிளை செயற்குழுக் கூட்டம் சேரன்மகாதேவியில் நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு, கட்சியின் மாவட்டத் தலைவா் எம்.கே. பீா்மஸ்தான் தலைமை வகித்தாா். கட்சியின் மாவட்ட துணைத் தலைவா் மஜித், பொருளாளா் ஓயிஸ், மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் ஷபி, பால் மைதீன், பேரவைத் தொகுதித் தலைவா் கள் அபுபக்கா் (அம்பை), கனி (நான்குனேரி) பாதுல் அஸ்ஹாப் (ராதாபுரம்), நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில் விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி டிச. 27 ஆம் தேதி நான்குநேரி சுங்கசாவடியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவது, அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் கூடுதல் மருத்துவா்கள், செவிலியா்கள் நியமனம் செய்ய வேண்டும், விமன்ஸ் இந்தியா மூமெண்ட் சாா்பில் சமையல் எரிவாயு விலை உயா்வைக் கண்டித்து ஆா்ப்பாட்டம் நடத்துவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.

மாவட்ட பொதுச் செயலா் மீராசா வரவேற்றாா். மாவட்டச் செயலா் சுலைமான் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.