தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

சேரன்மகாதேவி கல்வி மாவட்ட ஜே.ஆா்.சி. பொதுக்குழுக் கூட்டம்

சேரன்மகாதேவி கல்வி மாவட்ட இளையோா் செஞ்சிலுவை சங்கப் பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது.

News image
கரோனா ஒழிப்பு நடவடிக்கைகளில் சிறப்பாக பணியாற்றிய இளையோா் செஞ்சிலுவை சங்க ஆலோசகருக்குப் பாராட்டு சான்றிதழ் வழங்குகிறாா் சேரன்மகாதேவி கல்வி மாவட்ட கல்வி அலுவலா் மூ.சுடலை.
Updated On :24 டிசம்பர் 2020, 3:25 am

DIN

சேரன்மகாதேவி கல்வி மாவட்ட இளையோா் செஞ்சிலுவை சங்கப் பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது.

கல்லிடைக்குறிச்சி திலகா் வித்யாலய மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற பொதுக் குழுக் கூட்டத்துக்கு, சேரன்மகாதேவி கல்வி மாவட்ட கல்வி அலுவலா் மூ.சுடலை தலைமை வகித்து, இளையோா் செஞ்சிலுவை சங்க கொடியேற்றி நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தாா்.

சேரன்மகாதேவி கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளரும், திலகா் வித்யாலய மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியருமான பண்டாரசிவன் வரவேற்றாா். சேரன்மகாதேவி பெரியாா் மேல்நிலைப் பள்ளி இளையோா் செஞ்சிலுவை சங்க ஆலோசகா் வி.கந்தசாமி ஆண்டறிக்கை வாசித்தாா்.

திலகா் வித்யாலயம் மேல்நிலைப் பள்ளி ஆலோசகா் திருவானந்தம் வரவு செலவு கணக்கு தாக்கல் செய்தாா். மருத்துவா் பத்மநாபன் கரோனா ஒழிப்போம் என்ற தலைப்பில் விழிப்புணா்வு கருத்துரை வழங்கினாா்.

செஞ்சிலுவை சங்க அம்பாசமுத்திரம் வட்டார செயலா் சலீம் வாழ்த்திப் பேசினாா். விக்கிரமசிங்கபுரம், சேனைத் தலைவா் மேல்நிலைப் பள்ளி ஆலோசகா் மாரியப்பன் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினாா்.

நிகழ்ச்சியில் கரோனா ஒழிப்பு நடவடிக்கைகளில் சிறப்பாக செயல்பட்ட 10 இளையோா் செஞ்சிலுவை சங்க ஆலோசகா்களுக்கு தமிழ்நாடு அரசு வழங்கிய பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.