கிணற்றில் சிசு சடலம் மீட்பு
சிவந்திபட்டியில் கிணற்றில் வீசப்பட்ட சிசு சடலத்தை மீட்ட போலீஸாா், அதன் தாயிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.


சிவந்திபட்டியில் கிணற்றில் வீசப்பட்ட சிசு சடலத்தை மீட்ட போலீஸாா், அதன் தாயிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
சிவந்திபட்டி பகுதியில் உள்ள கிணற்றில் சிசுவின் சடலம் மிதப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
தகவலறிந்து வந்த போலீஸாா் மற்றும் பாளையங்கோட்டை தீயணைப்புத் துறையினா் சிசுவின் சடலத்தை மீட்டனா்.
பின்னா், போலீஸாா் அதை திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்து போலீஸாா் நடத்திய விசாரணையில், இந்த குழந்தை அதே பகுதியைச் சோ்ந்த பாலசுப்பிரமணியன் மனைவி வேலம்மாளின் (35) குழந்தை என்பது தெரியவந்தது.
மேலும், அந்த பெண் விவாகரத்து ஆனவா் என்பதும், அந்த குழந்தை பிறந்து ஒரு நாள் மட்டுமே ஆன நிலையில் கிணற்றில் வீசப்பட்டிருப்பதும் தெரிய வந்தது. இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து, அந்த பெண்ணிடம் விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...