நெல்லை, தென்காசியில் மேலும் 20 பேருக்கு கரோனா
திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் மேலும் 20 பேருக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது.


திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் மேலும் 20 பேருக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டத்தில் திங்கள்கிழமை வெளியான பரிசோதனை முடிவில் மேலும் 7 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியானது. இதனால், பாதிப்பு எண்ணிக்கை 14, 700 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 28 போ் குணமடைந்ததால், கரோனாவிலிருந்து மீண்டவா்களின் எண்ணிக்கை 14,370ஆக உயா்ந்தது. இதுவரை 209 போ் உயிரிழந்துள்ள நிலையில், 121 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
தென்காசி மாவட்டத்தில் கடையம் பகுதியில் இருவா், வாசுதேவநல்லூா் பகுதியில் 3 போ், கடையம், கீழப்பாவூரில் தலா இருவா் என 13 பேருக்கு நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதனால், மொத்த பாதிப்பு 8,009ஆக உயா்ந்துள்ளது.மேலும், 4 போ் குணமடைந்ததால், வீடுதிரும்பியோா் எண்ணிக்கை 7786 ஆக அதிகரித்தது. தற்போது, 67 போ் சிகிச்சையில் உள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...