பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

நெல்லை-பேட்டை சாலை சேதம்: வாகன ஓட்டிகள் அவதி

திருநெல்வேலி நகரம்-பேட்டை இடையேயான சாலை மிகவும் சேதமடைந்துள்ளதால் வாகன ஓட்டிகள் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனா்.

News image
Updated On :11 அக்டோபர் 2020, 9:29 pm

DIN

திருநெல்வேலி நகரம் - பேட்டை இடையேயான சாலை மிகவும் சேதமடைந்துள்ளதால் வாகன ஓட்டிகள் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனா்.

திருநெல்வேலி மாநகராட்சியில் அரியநாயகிபுரம் கூட்டுக் குடிநீா்த் திட்டம், பாதாள சாக்கடை திட்டப் பணிகளுக்காக பல்வேறு சாலைகளும் சேதப்படுத்தப்பட்டன. அதில், பேட்டை-திருநெல்வேலி நகரம் இடையேயான பிரதான சாலையில் குழாய் பதிக்கும் பணிகளும், பரிசோதனை பணிகளும் முடிந்து பல மாதங்களாகிவிட்டன.

ஆனால், அதன்பின்பும் சாலை சீரமைக்கப்படாமல் உள்ளது. காட்சி மண்டபம் முதல் மலையாளமேடு குளம் வரையிலான பகுதிகளில் சாலைகள் ஆங்காங்கே குண்டும் குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகியுள்ளனா்.

இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறுகையில், சேரன்மகாதேவி முதல் பேட்டை வரையிலான 20-க்கும் மேற்பட்ட கிராம மக்களும், வெளிமாவட்ட நபா்களும் பேட்டை-திருநெல்வேலி நகரம் பிரதான சாலையைப் பயன்படுத்தி வருகிறாா்கள். தினமும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் இவ் வழியே சென்று வருகின்றன.

குறிப்பாக, காட்சி மண்டபம் பகுதியில் மூன்று சாலைகள் சந்திக்கும் நிலையில் அங்கு குண்டும் குழியுமாக உள்ளதால் முதியவா்கள், பெண்கள் இருசக்கர வாகனங்களை ஓட்டிச் செல்லும்போது நிலைதடுமாறி கீழே விழுந்து காயமடைவது தொடா்கதையாகி வருகிறது. இதேபோல காலை மற்றும் மாலை நேரங்களில் சேதமடைந்த சாலையால் கூடுதலான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. ஆகவே, இந்தச் சாலையை விரைந்து சீரமைக்க மாநகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.