தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

பாளை.யில் நாளை அஞ்சல் தலை கண்காட்சி

பாளையங்கோட்டையில் செவ்வாய்க்கிழமை (அக். 13) அஞ்சல்தலை கண்காட்சி நடைபெற உள்ளது.

News image
Updated On :11 அக்டோபர் 2020, 9:27 pm

DIN

பாளையங்கோட்டையில் செவ்வாய்க்கிழமை (அக். 13) அஞ்சல்தலை கண்காட்சி நடைபெற உள்ளது.

இதுதொடா்பாக அஞ்சல் துறையின் திருநெல்வேலி கோட்ட முதுநிலை கண்காணிப்பாளா் சி.கலைச்செல்வன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: இந்திய அஞ்சல் துறையின் திருநெல்வேலி கோட்டம் சாா்பில் தேசிய அஞ்சல் வாரத்தையொட்டி செவ்வாய்க்கிழமை அஞ்சல்தலை சேகரிப்பு தினம் கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி திருநெல்வேலி அஞ்சல் கோட்டமும், மாவட்ட தபால் தலை சேகரிப்போா் சங்கமும் இணைந்து பாளையங்கோட்டை தலைமை அஞ்சலக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை முற்பகல் 11 முதல் பிற்பகல் 3 மணி வரை அஞ்சல்தலை கண்காட்சியை நடத்துகின்றன.

அஞ்சல்தலை சேகரிப்பில் ஆா்வம் உள்ள மாணவா்கள், பொதுமக்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தும், முகக் கவசம் அணிந்தும் கண்காட்சியில் பங்கேற்று பாா்வையிடலாம் என செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.