மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்விஜம்மு-காஷ்மீரில் வீட்டிற்கு வெளியே வெடித்த மர்ம பொருள் தமிழ்நாடு, புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைக்கும்: பியூஷ் கோயல் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: இன்று மாலை தீர்ப்பு!
/

அம்பாசமுத்திரத்தில் இந்திய கம்யூ. கட்சியினர் மறியல்

அம்பாசமுத்திரத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினரை காவல்துறையினர் கைது செய்தனர். 

News image

அம்பாசமுத்திரத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர்.

Updated On :12 அக்டோபர் 2020, 7:17 am

DIN

அம்பாசமுத்திரத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினரை காவல்துறையினர் கைது செய்தனர். 

வேளாண் புதிய சட்டத்தை கைவிடக் கோரியும், இலவச மின்சாரத் தடை, தொழிலாளர் சட்டத் தொகுப்பு, பொதுத்துறையை தனியாருக்கு விற்பது உள்ளிட்ட சட்டத் திருத்த மசோதாவைக் கைவிட வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அம்பாசமுத்திரத்தில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. ஒன்றியச் செயலர் ராமகிருஷ்ணன் இதற்கு தலைமை வகித்தார். 

ஒன்றிய துணைச் செயலர் பரத்வாஜ் நகர செயலாளர்கள் வடிவேல் சிவக்குமார் தாமஸ் மாவட்ட மாதர் சங்கத் தலைவி சபியால் உள்பட பலர் மறியலில் கலந்து கொண்டனர். மறியலில் மத்திய அரசின் மக்கள் விரோத விவசாயிகள் விரோத சட்டத்தை எதிர்த்தும் மாநில அரசைக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பினர். போராட்டத்தில் கலந்து கொண்ட 3 பெண்கள் உள்பட 27 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். 

மேலும், தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட 33 பேரை போலீசார் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.