மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்விஜம்மு-காஷ்மீரில் வீட்டிற்கு வெளியே வெடித்த மர்ம பொருள் தமிழ்நாடு, புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைக்கும்: பியூஷ் கோயல் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: இன்று மாலை தீர்ப்பு!
/

திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் முற்றுகை

திருநெல்வேலி மாநகராட்சிக்குச் சொந்தமான குப்பைக்கிடங்கில் அடிக்கடி தீவிபத்து ஏற்படுவதாகக் கூறி  ராமையன்பட்டி ஊராட்சி மக்கள் ஆட்சியர் அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனர்.

News image

திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகம் முன்பு திங்கள்கிழமை முற்றுகையில் ஈடுபட்ட ராமையன்பட்டி ஊராட்சி மக்கள்.

Updated On :12 அக்டோபர் 2020, 6:22 am

DIN

திருநெல்வேலி மாநகராட்சிக்குச் சொந்தமான குப்பைக்கிடங்கில் அடிக்கடி தீவிபத்து ஏற்பட்டு உருவாகும் புகைமண்டலத்தால் மிகவும் அவதிக்குள்ளாவதாகக் கூறி ராமையன்பட்டி ஊராட்சி மக்கள் ஆட்சியர் அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனர்.

திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் திங்கள்கிழமை காணொலிக் காட்சி முறையில் நடைபெற்றது. இருப்பினும் ஏராளமான மக்கள் ஆட்சியர் அலுவலகத்திற்கு நேரில் வந்து தங்கள் பகுதியின் அடிப்படை பிரச்னைகள் தொடர்பான மனுவை ஆட்சியர் அலுவலக வாயிலில் வைக்கப்பட்டிருந்த மனுப்பெட்டியில் அளித்துச் சென்றனர். திருநெல்வேலி அருகேயுள்ள ராமையன்பட்டி ஊராட்சியைச் சேர்ந்த பெண்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் மாவீரர் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்கத்தின் தலைவர் மா.மாரியப்ப  பாண்டியன் தலைமையில் திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர். 

பின்னர் திருநெல்வேலி மாநகராட்சி குப்பைக்கிடங்கை அகற்றக்கோரி முழக்கமிட்டு முற்றுகையில் ஈடுபட்டனர். அங்கு பாதுகாப்புக்காக நின்று கொண்டிருந்த காவல்துறையினர் அவர்கள் ஆட்சியர் அலுவலகத்திற்குள் நுழையாமல் தடுத்தனர். பின்னர் அவர்கள் அளித்த மனு: திருநெல்வேலி மாநகராட்சி பகுதிகளில் தினமும் சேகரிக்கப்படும் சுமார் 150 டன் குப்பைகள் அனைத்தும் ராமையன்பட்டி ஊராட்சிக்குள்பட்ட பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குப்பைக்கிடங்கிற்கு கொண்டு வரப்படுகின்றன.  அவ்வாறு சேமித்து வைக்கப்படும் குப்பைக்கிடங்கில் அடிக்கடி தீ விபத்து ஏற்படுகிறது. 

ஏற்கெனவே கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு போராட்டம்  நடத்தியபோது குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. அதன்பின்பு குப்பைகள் சேராது என உறுதியளித்தனர். ஆனால், அந்தத்திட்டம் முறையாக செயல்படுத்தாததால் மீண்டும் குப்பைகள் குவிந்து தீ பிடித்து வருகின்றன. அதனால் உருவாகும் நச்சு புகையால் பொதுமக்கள் பல்வேறு நோய்களுக்கு ஆளாகும் சூழலும், இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும் அபாயமும் உள்ளது. ஆகவே, திருநெல்வேலி மாநகராட்சி குப்பைக்கிடங்கிற்கு மாவட்ட நிர்வாகம் தடை விதிக்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.