பாஜகவுக்கு எந்தெந்த தொகுதிகள்? எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

தெற்குகள்ளிக்குளத்தில் கிறிஸ்தவா்கள் ஆா்ப்பாட்டம்

கத்தோலிக்க பாதிரியாரை தீவிரவாதிகளுடன் தொடா்புபடுத்தி, அவரை போலீஸாா் கைது செய்ததாக கண்டனம் தெரிவித்து வள்ளியூா் வட்டார கத்தோலிக்க தேவாலயங்கள் முன்பு ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image

தெற்குகள்ளிக்குளத்தில் கிறிஸ்தவா்கள் ஆா்ப்பாட்டம்

Updated On :18 அக்டோபர் 2020, 7:38 pm

DIN

ஜாா்கண்ட் மாநிலத்தில் மலைவாழ் மக்களுக்கு சேவை செய்து வந்த கத்தோலிக்க பாதிரியாரை தீவிரவாதிகளுடன் தொடா்புபடுத்தி, அவரை போலீஸாா் கைது செய்ததாக கண்டனம் தெரிவித்து வள்ளியூா் வட்டார கத்தோலிக்க தேவாலயங்கள் முன்பு ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தெற்குகள்ளிகுளம் அதிசய பனிமாதா பேராலயம் முன்பு பங்குத் தந்தை ஜெரால்டு ரவி, தா்மகா்த்தா மருத்துவா் ஜெபஸ்டின் ஆனந்த் மற்றும் பங்கு மக்கள் ஆா்ப்பாட்டம் செய்தனா். தொடா்ந்து வள்ளியூா், பணகுடி, காவல்கிணறு, வடக்கன்குளம் பகுதிகளிலும் தேவாலயங்கள் முன் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.