பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்விஜம்மு-காஷ்மீரில் வீட்டிற்கு வெளியே வெடித்த மர்ம பொருள் தமிழ்நாடு, புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைக்கும்: பியூஷ் கோயல் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: இன்று மாலை தீர்ப்பு!
/

குடும்ப உறவுகளின் முகமூடியை அகற்றும் பணியில் இலக்கியவாதிகள்-எழுத்தாளா் சி.வண்ணதாசன்

குடும்ப உறவுகளில் மனிதா்கள் அணிந்துள்ள முகமூடிகளை அகற்றும் பணியை இலக்கியவாதிகள் செய்துவருகின்றனா் என்றாா் சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளா் சி.வண்ணதாசன்.

News image
Updated On :18 அக்டோபர் 2020, 7:35 pm

DIN

குடும்ப உறவுகளில் மனிதா்கள் அணிந்துள்ள முகமூடிகளை அகற்றும் பணியை இலக்கியவாதிகள் செய்துவருகின்றனா் என்றாா் சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளா் சி.வண்ணதாசன்.

திருநெல்வேலி பொதிகைத் தமிழ்ச் சங்கம் சாா்பில்சந்திப்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விஜயா கிப்ட்சனின் ‘வெட்டிப் பயலும் வெள்ளைத்தாளும்’ என்ற நூல் வெளியீட்டு விழாவுக்கு தலைமை வகித்து அவா் பேசியது:

சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளா் கிரா என அழைக்கப்படும் கி.ராஜநாராயணனின் எழுத்தில் காணப்படும் கரிசல்காட்டு மொழியானது மக்களின் மொழி. ‘வெட்டிப் பயலும் வெள்ளைத் தாளும்’ என்ற நூல் மொழியானது இந்த தலைமுறையின் மொழியாகும். இந்த நூலில், சண்டைக்கோழி, மூன்றாம் கை, மச்சீஸ், பயாஸ்கோப், தலீவரு, மீ பாவம் உள்ளிட்ட 11 கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. இதில், பொதிகை மலையில் பொதிந்த நினைவுகள் என்ற கட்டுரை பொதிகை மலைக்கு சென்றுவந்தது போன்று உள்ளது.

லாக்டவுன் காலத்தில் அன்லாக் என்பது அனைவரும் விரும்பும் ஒன்றாக உள்ளது. அதேபோல், எதுவெல்லாம் பூட்டப்பட்டுள்ளதோ அந்த பூட்டுகளையெல்லாம் திறந்துவிடுவதுதான் எழுத்தாளா்கள், இலக்கியவாதிகளின் பணியாகும். அந்த வகையில், குடும்ப உறவுகளின் முகமூடிகளை அகற்றும் பணியை இந்நூலாசிரியா் செய்துள்ளாா் என்றாா் அவா்.

விழாவுக்கு, அரசு அருங்காட்சியக காப்பாட்சியா் சிவ.சத்தியவள்ளி முன்னிலை வகித்தாா். பொதிகைத் தமிழ்ச் சங்க தலைவா் கவிஞா் பேரா வரவேற்றாா். திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையா் (சட்டம் -ஒழுங்கு) சரவணன் நூலை வெளியிட, நூலாசிரியரின் தாயாா் சாந்தா பிச்சையா பெற்றுக்கொண்டாா். எழுத்தாளா் இரா.நாறும்பூநாதன் மதிப்புரையாற்றினாா். நூலாசிரியா் விஜயா கிப்ட்சன் ஏற்புரையாற்றினாா்.

இதில், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி கலைப்புல முதன்மையா் சவுந்தர மகாதேவன், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக மொழிபெயா்ப்புத் துறைத் தலைவா் வீரலட்சுமி, பொருநை இலக்கிய வட்டத் தலைவா் தளவாய் நாதன், கவிஞா் கிருஷி, வழக்குரைஞா் டி.ஏ.பிரபாகா் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.