நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் இளைஞர், பெண் தீக்குளிக்க முயற்சி

நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் இளைஞர், பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. 
நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் இளைஞர், பெண் தீக்குளிக்க முயற்சி

நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் இளைஞர், பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. 

திருநெல்வேலி மாவட்டம், மேலப்பாளையத்தைச் சேர்ந்தவர் கோழி சுலைமான். இவர் பல்வேறு மீது வழக்குகள் உள்ளன. சமீபத்தில் மேலப்பாளையம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் திங்கள்கிழமை திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த சுலைமான் மண்ணெண்ணையை ஊற்றி  தீக்குளிக்க முயன்றார். இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் அவரை தடுத்து நிறுத்தினர். அப்போது தன் மீது காவல்துறையினர் தொடர்ந்து பொய் வழக்கு போடுவதாகவும் தன்னை வாழ விடவில்லை என்றும் சுலைமான் கூறினார்.

இதேபோல், முன்னீர்பள்ளம் பகுதியைச் சேர்ந்தவர் இசக்கியம்மாள் (38). கட்டட தொழிலாளி.  இவர்  அதேபகுதியில் சிலரிடம் ரூபாய் 30,000 கொடுத்து இலவச பட்டா வாங்கியுள்ளார். தற்போது அந்த இடத்தில் வீடு கட்டி வருகிறார். இந்த நிலையில் சிலர் அந்த இடம் தங்களுக்குச் சொந்தமானது, அதில் வீடு கட்டக்கூடாது என தடுப்பதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக இசக்கியம்மாள் முன்னீர்பள்ளம் காவல் நிலையம் ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் புகார் மனு அழுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் விரக்தி அடைந்த இசக்கியம்மாள் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். 

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒரே நாளில் இருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com