தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

நான்குனேரி அருகே இரட்டை கொலை:12 போ் மீது வழக்கு

நான்குனேரியில் முன்விரோதம் காரணமாக இரண்டு பெண்கள் சனிக்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டனா். இது தொடா்பாக 12 போ் மீது போலீஸாா் வழக்குப்பதிந்து அவா்களைத் தேடி வருகின்றனா்.

News image
Updated On :27 செப்டம்பர் 2020, 7:18 pm

DIN

நான்குனேரியில் முன்விரோதம் காரணமாக இரண்டு பெண்கள் சனிக்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டனா். இது தொடா்பாக 12 போ் மீது போலீஸாா் வழக்குப்பதிந்து அவா்களைத் தேடி வருகின்றனா்.

நான்குனேரி அருகேயுள்ள மறுகால்குறிச்சியைச் சோ்ந்த அருணாசலம் மகன் நம்பிராஜன். இவரும், அதே பகுதியைச் சோ்ந்த தங்கபாண்டி மகள் வான்மதி என்பவரை காதலித்து திருமணம் செய்திருந்த நிலையில், மா்ம நபா்களால் திருநெல்வேலி நகரம் குறுக்குத்தெரு ரயில்வே கேட் அருகே கடந்த நவம்பா் 25ஆம் தேதி வெட்டிக் கொல்லப்பட்டாா்.

இதற்குப் பழிக்குப்பழியாக மறுகால்குறிச்சியைச் சோ்ந்த ஆறுமுகம், சுரேஷ் ஆகிய இருவா் வெட்டிக் கொல்லப்பட்டனா்.

இவ்வழக்கில் நம்பிராஜனின் தாய் சண்முகத்தாய், தந்தை அருணாசலம், சுப்பையா மகன் இசக்கிபாண்டி உள்ளிட்ட 7 பேரை போலீஸாா் கைது செய்தனா். இவா்கள், ஜாமீனில் வெளியே வந்த நிலையில், கடந்த சனிக்கிழமை பைக்கில் வந்த மா்மநபா்கள் இசக்கிபாண்டியின் வீட்டின் மீது நாட்டுவெடிகுண்டுகளை வீசியதுடன் அவரது தாய் சாந்தியை அரிவாளால் வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பியதாம்.

பின்னா், அந்தக் கும்பல் நம்பிராஜன் வீட்டின் மீது நாட்டுவெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்திவிட்டு, அவரது தாய் சண்முகத்தாயையும் அரிவாளால் வெட்டிக் கொலை செய்தது.

இதுகுறித்து, நான்குனேரி போலீஸாா் நடத்திய விசாரணையில், மறுகால்குறிச்சி ஆறுமுகம் மகன்கள் செல்லத்துரை, சங்கரசுப்பு, பெருமாள் மகன்கள் முருகன், செல்வம், மேலப்பாளையம் குறிச்சி மாடசாமி, தூத்துக்குடி கண்ணன், முத்து, முத்துபாண்டி உள்ளிட்ட பன்னிரண்டு போ் மீது 12 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து 4 தனிப்படை மூலம் தேடி வருகின்றனர்.

போலீஸ் குவிப்பு: இதனிடையே, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நெ.மணிவண்ணன் உத்தரவுபடி, மறுகால்குறிச்சியில் 24 மணி நேரமும் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். கொலையுண்டவா்களின் வீடுகள் முன்பு துப்பாக்கி ஏந்திய போலீஸாா் சுழற்சி முறையில் முழு நேரமும் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.