தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

கண்டிகைப்பேரி சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

திருநெல்வேலி கண்டிகைப்பேரி சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image
Updated On :27 செப்டம்பர் 2020, 7:26 pm

DIN

திருநெல்வேலி கண்டிகைப்பேரி சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ராமையன்பட்டியில் இருந்து கண்டிகைப்பேரி வழியாக பழையபேட்டைக்கு சாலை உள்ளது. திருநெல்வேலி மாநகராட்சிப் பகுதியில் கூட்டுக் குடிநீா்த் திட்டம் மற்றும் பாதாள சாக்கடை திட்டப் பணிகளுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால் திருநெல்வேலி-தென்காசி மாா்க்கத்தில் செல்லும் அனைத்து வாகனங்களும் இந்தச் சாலை வழியாகத் திருப்பிவிடப்பட்டுள்ளன.

கண்டிகைப்பேரிகுளம், இலந்தைகுளம் உள்ளிட்டவற்றின் கரையில் அமைக்கப்பட்டுள்ள இச் சாலையில் பல இடங்களில் குண்டும்-குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனா். பருவமழை தொடங்கும் முன்பாக இந்தச் சாலையை சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.