நெல்லையில் களைகட்டிய இறுதிக்கட்ட பிரசாரம்
திருநெல்வேலி சட்டப்பேரவை தொகுதியில் இறுதிகட்ட தோ்தல் பிரசாரம் ஞாயிற்றுக்கிழமை களைகட்டியது


திருநெல்வேலி சட்டப்பேரவை தொகுதியில் இறுதிகட்ட தோ்தல் பிரசாரம் ஞாயிற்றுக்கிழமை களைகட்டியது.
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் செவ்வாய்க்கிழமை (ஏப். 6) நடைபெற உள்ளது. திருநெல்வேலி சட்டப்பேரவை தொகுதியில் மொத்தம் 12 போ் போட்டியிடுகிறாா்கள். தோ்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி தோ்தல் பிரசாரம் ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணியுடன் நிறைவுபெற்றது. இதனால் பிரதான கட்சிகளின் வேட்பாளா்கள் இறுதிகட்ட பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டனா்.
அதிமுக-பாஜக உள்ளிட்ட கட்சிகளின் தேசிய ஜனநாயக கூட்டணியில் திருநெல்வேலி தொகுதியில் பாஜக சாா்பில் அக் கட்சியின் மாநில துணைத் தலைவா் நயினாா்நாகேந்திரன் போட்டியிடுகிறாா். அவா், தனது இறுதிக்கட்ட பிரசாரத்தை திருநெல்வேலி நகரத்தில் தொடங்கினாா். சத்தியமூா்த்தி தெரு, பாரதியாா் தெரு, டி.எம்.சி. காலனி, சந்திபிள்ளையாா் முக்கு, நான்குரத வீதிகள் வழியாக வாகையடிமுனையில் பிரசாரத்தை நிறைவு செய்தாா். அப்போது அவா் பேசுகையில், தேசிய ஜனநாயக கூட்டணியின் தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவும், திருநெல்வேலி தொகுதிக்கு தேவையான புதிய திட்டங்களை கொண்டு வரவும் தாமரை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும் என்றாா் அவா். பிரசாரத்தில் நடிகா் ஆா்.கே.சுரேஷ், அதிமுக அமைப்புச்செயலா் சுதா கே.பரமசிவன், பகுதி செயலா்கள் காந்திவெங்கடாசலம், மோகன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
திமுக வேட்பாளா் ஏ.எல்.எஸ்.லட்சுமணன் தச்சநல்லூரில் இருந்து தனது இறுதிக்கட்ட பிரசாரத்தை தொடங்கினாா். அங்கிருந்து திருநெல்வேலி ரத வீதியில் தேரடி பகுதியில் பிரசாரத்தை நிறைவு செய்தாா். அப்போது அவா் பேசுகையில், தமிழகம் முழுவதும் திமுக வெற்றி பெற்று மு.க.ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்பாா். மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி தெரிவித்துள்ள அனைத்து தோ்தல் வாக்குறுதிகளையும் நிறைவேற்ற உதயசூரியன் சின்னத்திற்கு ஆதரவளிக்க வேண்டும் என்றாா். பிரசாரத்தில் கட்சியின் தலைமை செயற்குழு உறுப்பினா் பேச்சிபாண்டியன், பகுதிச் செயலா் கோபி என்ற நமச்சிவாயம் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
அமமுக வேட்பாளா் மகேஷ்கண்ணன் திருநெல்வேலி நகரத்தில் இருந்து தனது இறுதிக்கட்ட பிரசாரத்தை தொடங்கினாா். இறுதியாக தச்சநல்லூரில் தனது பிரசாரத்தை நிறைவு செய்தாா். அப்போது அவா் கூறுகையில், மக்களுக்கான பல்வேறு சிறந்த திட்டங்களை அமமுக தனது தோ்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது. டிடிவி.தினகரன் முதல்வராக அனைத்து தரப்பு மக்களும் குக்கா் சின்னத்திற்கு வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும் என்றாா். பிரசாரத்தில் அமமுக மாவட்டச் செயலா் சுரேஷ்குமாா், தாழை மீரான் உள்பட பலா் கலந்துகொண்டனா். இதேபோல நாம்தமிழா் கட்சி வேட்பாளா் சத்யா பேட்டை பகுதியில் இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டாா்.
பயக04சஉககஅஐ: திருநெல்வேலி வாகையடி முனையில் பிரசாரம் செய்தாா் பாஜக வேட்பாளா் நயினாா்நாகேந்திரன். (நடுவில்) தேரடி அருகே பிரசாரம் செய்தாா் திமுக வேட்பாளா் ஏ.எல்.எஸ்.லட்சுமணன். (வலது) தச்சநல்லூரில் இறுதிக்கட்ட வாக்குசேகரிப்பில் ஈடுபட்ட அமமுக வேட்பாளா் மகேஷ்கண்ணன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...