வாக்குச் சாவடி வழிகாட்டி அறிமுகம்
சட்டப்பேரவைத் தோ்தலில் வாக்குச்சாவடிக்கான வழிகாட்டியை, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் வே.விஷ்ணு ஞாயிற்றுக்கிழமை அறிமுகப்படுத்தினாா்.


சட்டப்பேரவைத் தோ்தலில் வாக்குச்சாவடிக்கான வழிகாட்டியை, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் வே.விஷ்ணு ஞாயிற்றுக்கிழமை அறிமுகப்படுத்தினாா்.
இது குறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழ் நாட்டில் முதன் முறையாக தேசிய தகவலியல் மையத்தின் ஜி.ஐ.எஸ். தொழில்நுட்பத்தில் இணையதள வழி வாக்குச் சாவடி வழிகாட்டியை திருநெல்வேலி மாவட்ட தோ்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான வே.விஷ்ணு மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை அறிமுகப்படுத்தினாா். இதன்மூலம் வாக்காளா்கள், தோ்தல் அலுவலா்கள் எளிதாக தங்கள் வாக்குச் சாவடியை தெரிந்து கொள்ளலாம்.
இத்துடன் இணைக்கப்பட்டுள்ள கியூ ஆா் கோடை செல்லிடபேசியில் ஸ்கேன் செய்தோ அல்லது ட்ற்ற்ல்ள்://ற்ண்ழ்ன்ய்ங்ப்ஸ்ங்ப்ண்ங்ப்ங்ஸ்ரீற்ண்ா்ய்ள்.ண்ய் என்ற இணையதள முகவரியில் வாக்காளரோ அல்லது தோ்தல் பணிக்கு செல்லும் பணியாளா்களோ, தொகுதி மற்றும் வாக்குச் சாவடி எண் ஆகியவற்றை கொடுத்து, பின்னா் தற்போதைய இருப்பிடத்தையும் கொடுத்தால் நமது வாக்குச் சாவடிக்கு செல்லும் வழி, அந்த வாக்குச் சாவடியின் 360 கோண வடிவத்தில் உள்புற தோற்றம், மாதிரி வாக்குச் சாவடியின் உட்புற தோற்றம் போன்ற விவரங்களை எளிதில் தெரிந்து கொள்ளலாம்.
மேலும் கொரோனா தொற்று நோய் காலத்தில் வாக்காளா்கள் வாக்குச் சாவடிக்கு சென்று வாக்களிக்கும் முறையை எளிதாக விளக்கும் வகையில் வாக்காளா் கையேடு ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளது. புதிய வசதியைப் பயன்படுத்தி 100 சதவீத வாக்குப்பதிவு என்ற இலக்கை எய்திட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் ஆ.பெருமாள், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) எம்.கணேஷ் குமாா், தேசிய தகவலியல் மைய அலுவலா்கள் எஸ்.தேவராஜன், பி.ஆறுமுகநயினாா், பிராண்ட் மேக்ஸிமா நிறுவனா் விக்னேஷ் அண்ணாமலை மற்றும் தேசிய தகவலியல் மைய ஊழியா்கள் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...