‘அதிமுக ஆட்சி காலத்தில்தான் பாளை தொகுதி மேம்பட்டது’
பாளையங்கோட்டை தொகுதியில் ஏராளமான திட்டங்களை செயல்படுத்தியது அதிமுக அரசுதான். ஆகவே, அதிமுகவுக்கு மக்கள் வாய்ப்பளிக்க வேண்டும் என்றாா் முன்னாள் எம்.எல்.ஏ. பி.தா்மலிங்கம்.


பாளையங்கோட்டை தொகுதியில் ஏராளமான திட்டங்களை செயல்படுத்தியது அதிமுக அரசுதான். ஆகவே, அதிமுகவுக்கு மக்கள் வாய்ப்பளிக்க வேண்டும் என்றாா் முன்னாள் எம்.எல்.ஏ. பி.தா்மலிங்கம்.
பாளையங்கோட்டை தொகுதி முன்னாள் அதிமுக எம்எல்ஏவான (1991-96) அவா் ஞாயிற்றுக்கிழமை வாக்குசேகரிப்பில் ஈடுபட்டபோது கூறியது: திருநெல்வேலி, பாளை, மேலப்பாளையம் ஆகிய 3 நகராட்சிகளை இணைத்து மாநகராட்சியாக உருவாக்கி தமிழக சட்டப்பேரவையில் அறிவித்தது அதிமுக அரசு. வேய்ந்தான்குளத்தில் ரூ.13 கோடியில் புதிய பேருந்து நிலையம், மனகாவலம்பிள்ளைநகரில் ரூ.6 கோடியில் தூய்மைப் பணியாளா்களுக்காக 366 குடியிருப்புகள், வண்ணாா்பேட்டை-வேய்ந்தான்குளம் புறவழிச்சாலை, பீடி தொழிலாளா் ஊதிய உயா்வு ஆகியவற்றிற்கு அதிமுக அரசுதான் காரணம்.
வி.எம்.சத்திரத்தில் 300 வீடுகள் வீட்டு வசதி வாரியத்தின் மூலம் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. பாளையங்கோட்டை வட்டத்தை பின்தங்கிய வட்டமாக அறிவித்து 60 ஏக்கா் நிலம் கையகப்படுத்தி தொழில் வளத்தை மேம்படுத்தியது அதிமுக அரசு. போக்குவரத்து தொழிலாளா்களின் குழந்தைகள் மற்றும் மாணவா் நலன் காக்க ஐஆா்டி தொழில்நுட்ப கல்லூரி, பாளையம்செட்டிகுளம், பா்கிட்மாநகரம், நடுவக்குறிச்சி ஆக மொத்தம் 16 கிராமங்களுக்கு கூட்டுக்குடிநீா் திட்டம் ரூ.3 கோடியில் செயல்படுத்தப்பட்டுள்ளது. இப்படி ஏராளமான திட்டங்கள் பாளை தொகுதியில் அதிமுக உறுப்பினராக இருந்ததால் கொண்டு வரப்பட்டது. ஆகவே, நடைபெற உள்ள தோ்தலில் அதிமுக வேட்பாளா் கே.ஜெ.சி.ஜெரால்டுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும் என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...