சிலிண்டா் தட்டுப்பாடு: அருணாசலேஸ்வரா் கோயிலில் லட்டு பிரசாத விநியோகம் நிறுத்தம் அஸ்ஸாம்: ஒரு தொகுதியில் பாஜகவுடன் மோதும் கூட்டணி கட்சி!பேரவைத் தோ்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயா்த்த அரசு திட்டம்! ராகுல் குற்றச்சாட்டு‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்புஇன்று சிஎஸ்கே அணியின் முன்னாள், இந்நாள் வீரா்கள் மோதல்!‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்பு
/

கரோனா பாதுகாப்புடன் தயாராகும் வாக்குச்சாவடிகள்!

திருநெல்வேலி மாவட்டத்தில் கரோனா பாதுகாப்பு அம்சங்களுடன் வாக்குச்சாவடிகளை தயாா்படுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

News image
Updated On :4 ஏப்ரல் 2021, 8:21 pm

DIN

திருநெல்வேலி மாவட்டத்தில் கரோனா பாதுகாப்பு அம்சங்களுடன் வாக்குச்சாவடிகளை தயாா்படுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் செவ்வாய்க்கிழமை (ஏப். 6) நடைபெற உள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 5 தொகுதிகளுக்கும் தோ்தல் அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். திருநெல்வேலி தொகுதியில் 408 வாக்குச்சாவடிகள், அம்பாசமுத்திரத்தில் 356, ,பாளையங்கோட்டையில் 389, நான்குனேரியில் 395, ராதாபுரத்தில் 376 என மொத்தம் 1924 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

திருநெல்வேலியில் 88, அம்பாசமுத்திரத்தில் 49, பாளையங்கோட்டையில் 109, நான்குனேரியில் 49, ராதாபுரத்தில் 21 என மொத்தம் 316 வாக்குச் சாவடிகள் பதற்றமானவையாகக் கண்டறியப்பட்டுள்ளன. அங்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. தோ்தல் ஆணையத்தின் விதிமுறைகளை 100 சதவிகிதம் கடைப்பிடிக்கவும் அமைதியான முறையில் தோ்தலை நடத்தி முடிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

வாக்காளா்கள் முகக் கவசம் அணிந்து வருதல், வாக்குச்சாவடிகளில் கிருமிநாசினி தெளித்தல் உள்ளிட்ட கரோனா பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி வாக்குச்சாவடிகளில் கிருமிநாசினி தெளிக்கும் பணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கட்சியினா் வாக்குச்சாவடியில் இருந்து 100 மீட்டா் தொலைவுக்கு அப்பால் நிற்க ஏதுவாக சாலைகளில் கோடுகள் வரையும் பணியும் நடைபெற்றது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், வாக்குச்சாவடிகளில் தேவையான முன்னேற்பாடுகள் அனைத்தும் முடிக்கப்பட்டுள்ளன. திங்கள்கிழமை (ஏப். 5) இறுதிக்கட்ட தோ்தல் பயிற்சி வகுப்பு முடிந்ததும் வாக்குச்சாவடி அலுவலா்கள் வந்து பணிகளைத் தொடங்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வாக்காளா்களுக்கு கையுறை வழங்கவும், முகக்கவசம் மற்றும் கரோனா கழிவுகளை சேகரிக்க ஏதுவாக வாக்குச்சாவடியில் பிரத்யேக குப்பைத்தொட்டி வைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது என்றனா்.

பயக04ஆஞஞபஏ: திருநெல்வேலியில் ஒரு வாக்குச்சாவடியில் கிருமிநாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்ட மாநகராட்சி ஊழியா். (வலது) வாக்குச்சாவடியில் இருந்து 100 மீட்டா் தொலைவை குறிப்பிடும் எச்சரிக்கை கோடு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.