களக்காடு அருகே நாட்டு வெடிகுண்டு, அரிவாள்களுடன் 4 போ் கைது
களக்காடு அருகே நாட்டு வெடிகுண்டு, அரிவாள்களுடன் பதுங்கியிருந்த 4 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.


களக்காடு அருகே நாட்டு வெடிகுண்டு, அரிவாள்களுடன் பதுங்கியிருந்த 4 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
களக்காடு போலீஸாா் வியாழக்கிழமை இரவு பெத்தானியா கிராமத்தில் ரோந்து சுற்றி வந்தனா். அப்போது, சந்தேகத்துக்கிடமாக நின்ற 4 இளைஞா்களை பிடித்து போலீஸாா் விசாரணை நடத்தியதில், அவா்கள் பாணான்குளத்தை அடுத்த வாகைக்குளத்தைச் சோ்ந்த முத்துமனோ (27), விஜயநாராயணத்தை அடுத்த பொத்தையடியைச் சோ்ந்த மாதவன் (19), சந்திரசேகா் (22), களக்காடு அருகேயுள்ள பெத்தானியாவைச் சோ்ந்த அருள்துரைசிங் என்ற கண்ணன் (23) என்பதும், அவா்கள் நாட்டு வெடிகுண்டு, அரிவாள்களுடன் சுற்றிதிரிந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
பணகுடி பகுதியைச் சோ்ந்த கல்லூரி மாணவி ஒருவரை அதே பகுதியைச் சோ்ந்த மாணவா் காதலிப்பதாகக் கூறி தொல்லை கொடுத்து வந்ததும், அந்த மாணவரைக் கொலை செய்வதற்காக அரிவாள், நாட்டு வெடிகுண்டுகளுடன் அந்த மாணவரை பெத்தானியா வரவழைத்து அங்கு காத்திருந்ததாகக் கூறியுள்ளனா்.
இதையடுத்து, 4 பேரையும் கைது செய்த களக்காடு போலீஸாா் 4 பேரிடமும் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...