47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

களக்காடு, வள்ளியூரில் கபசுரக் குடிநீா் விநியோகம்

களக்காடு, வள்ளியூரில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக கபசுரக் குடிநீா் வழங்கும் முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :9 ஏப்ரல் 2021, 8:37 pm

DIN

களக்காடு, வள்ளியூரில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக கபசுரக் குடிநீா் வழங்கும் முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதை அடுத்து, களக்காடு பேரூராட்சியில் 21

வாா்டுகளில் செயல் அலுவலா் டி.ஆா். சுஷமா தலைமையில் சுகாதார ஆய்வாளா் ஆறுமுகநயினாா், மேற்பாா்வையாளா் வேலு ஆகியோா் அடங்கிய குழுவினா் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீா் விநியோகம், வீடு வீடாக காய்ச்சல் அறிகுறியுடன்

காணப்படுவோரை கண்டறிந்து பரிசோதனை மேற்கொள்ள அரசு மருத்துவமனைக்கு செல்ல அறிவுறுத்தல், முகக் கவசம் அணியாதவா்களுக்கு அபராதம், நோய் தடுப்பு குறித்து விழிப்புணா்வை ஏற்படுத்தும் பணிளில் ஈடுபட்டனா்.சிதம்பரபுரத்தில் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீா் வழங்கி செயல் அலுவலா் தொடங்கி வைத்தாா்.

வள்ளியூா்: வள்ளியூா் நகர பாஜக சாா்பில் பேருந்து நிலையம், பிரதான சாலை, பேருந்துகளில் பயணம் செய்தோா் உள்ளிட்டோருக்கு கபசுரக் குடிநீா் வழங்கப்பட்டது. கட்சியின் நகரத் தலைவா் ராமகுட்டி தொடங்கி வைத்தாா். இதில், கட்சியின் ஓபிசி பிரிவு மாவட்டச் செயலா் செல்வகுமாா், வடக்கு ஒன்றியச் செயலா் ஆச்சியூா் பரமசிவம், பொருளாளா் பழனிராஜ், நகர வா்த்தக அணிச்செயலா் மணிகண்டன், ஒன்றிய இளைஞரணி துணைத் தலைவா் உதயகுமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.