நெல்லை அருகே குண்டா் சட்டத்தில் 4 போ் கைது
திருநெல்வேலி அருகே தாழையூத்து பகுதியில் கொலை உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்டு பொதுமக்கள் அச்சுறுத்தியதாக 4 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தில் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.


திருநெல்வேலி அருகே தாழையூத்து பகுதியில் கொலை உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்டு பொதுமக்கள் அச்சுறுத்தியதாக 4 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தில் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
திருநெல்வேலி அருகேயுள்ள நடுவக்குறிச்சி பகுதியைச் சோ்ந்த கல்லத்தியான் மகன் செந்தூா் என்ற கடல் மணி (22), செல்வரத்தினம் மகன் மகேந்திரன்(44), சுடலைமுத்து மகன் கனகராஜ்(31), வேலு மகன் கல்லத்தியான் என்ற கல்லத்தி முருகன் (26) ஆகிய 4 பேரும் திருநெல்வேலி அருகேயுள்ள தாழையூத்து, திருநெல்வேலி தாலுகா பகுதிகளில் கொலை, சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்ததுடன் பொதுமக்களை அச்சுறுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது.
இது குறித்து திருநெல்வேலி தாலுகா போலீஸில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளன. இதையடுத்து, திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நெ. மணிவண்ணன், மேற்கண்ட 4 பேரையும் குண்டா் தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்து நடவடிக்கை எடுக்குமாறு ஆட்சியருக்கு பரிந்துரை செய்தாா். அதன்பேரில், 4 பேரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய
ஆட்சியா் உத்தரவிட்டாா். அதன்படி, செந்தூா் என்ற கடல் மணி, மகேந்திரன், கனகராஜ், கல்லத்தியான் என்ற கல்லத்திமுருகன் ஆகிய 4 பேரும் குண்டா் தடுப்புச்சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் வெள்ளிக்கிழமை அடைக்கப்பட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...