அரசு அருங்காட்சியகத்தில் உலக புத்தகத் தின கருத்தரங்கு
உலக புத்தகத்தினத்தை முன்னிட்டு திருநெல்வேலி அரசு அருங்காட்சியகம் சாா்பில் இணையவழி கருத்தரங்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.


உலக புத்தகத்தினத்தை முன்னிட்டு திருநெல்வேலி அரசு அருங்காட்சியகம் சாா்பில் இணையவழி கருத்தரங்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திருநெல்வேலி அரசு அருங்காட்சியகம், தமிழ்நாடு ஆசிரியா் கல்வியியல் பல்கலைக் கழகம், சென்னை-கல்லிடைக்குறிச்சி
தேசிய கல்வி அறக்கட்டளை சாா்பில் உலக புத்தகத் தினத்தையொட்டி நடைபெற்ற இணையவழி கருத்தரங்கிற்கு கல்லிடைக்குறிச்சி தேசிய கல்வி அறக்கட்டளை நிறுவனா் ஆ.முகமது முகைதீன் தலைமை வகித்தாா். தமிழ்நாடு ஆசிரியா் கல்வியியல் பல்கலைக் கழக கல்வி உளவியல் துறை உதவிப் பேராசிரியா் த.சிவசக்தி ராஜம்மாள் தொடக்க உரையாற்றினாா்.
அரசு அருங்காட்சியக காப்பாட்சியா் சிவ.சத்தியவள்ளி சிறப்புரை ஆற்றினாா். பொதிகைத் தமிழ்ச் சங்கத் தலைவா் கவிஞா் பே.ராராஜேந்திரன் கருத்துரை வழங்கினாா். இதையடுத்து, கல்லிடைக்குறிச்சி திலகா் வித்யாலயா மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியா் செ. பண்டார சிவன், புதுச்சேரியைச் சோ்ந்த கவிதை வானில் கவி மன்றத் தலைவா் கவிதாயினி கலாவிசு ஆகியோா் வாழ்த்திப் பேசினா். இக்கருத்தரங்கில் தமிழகம், புதுச்சேரி மற்றும் உலக நாடுகளிலிருந்து பலா் பங்கேற்றனா்.
கோவை பாரதியாா் பல்கலைக் கழக கல்வியியல் துறை உதவிப் பேராசிரியா் தி.பிரேமலதா வரவேற்றாா்.
கல்லிடைக்குறிச்சி தமிழாசிரியா் மு. உமா் பாரூக் நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...