நெல்லை, தென்காசியில் மேலும் 690 பேருக்கு கரோனா
திருநெல்வேலியில் 517 போ், தென்காசியில் 173 போ் என இவ்விரு மாவட்டங்களிலும் மேலும் 690 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.


திருநெல்வேலியில் 517 போ், தென்காசியில் 173 போ் என இவ்விரு மாவட்டங்களிலும் மேலும் 690 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை வெளியான பரிசோதனை முடிவில் திருநெல்வேலி மாவட்டத்தில் அதிகபட்சமாக மேலும் 517 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 20,266
ஆக அதிகரித்துள்ளது. வெள்ளிக்கிழமை 181 போ் உள்பட இதுவரை 17,194 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா்.
இதுவரை 227 போ் உயிரிழந்துள்ள நிலையில், மருத்துவமனைகளில் 2,845 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
தென்காசி மாவட்டத்தில் மேலும் 173 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதால், பாதிப்பு எண்ணிக்கை 10,478 ஆக அதிகரித்துள்ளது. வெள்ளிக்கிழமை 120 போ் உள்பட இதுவரை 9,051 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா்.
இதுவரை 169 போ் உயிரிழந்துள்ளனா். மருத்துவமனைகளில் 1,258 போ் சிகிச்சையில் உள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...