திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்! சிலிண்டா் தட்டுப்பாடு: அருணாசலேஸ்வரா் கோயிலில் லட்டு பிரசாத விநியோகம் நிறுத்தம் அஸ்ஸாம்: ஒரு தொகுதியில் பாஜகவுடன் மோதும் கூட்டணி கட்சி!பேரவைத் தோ்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயா்த்த அரசு திட்டம்! ராகுல் குற்றச்சாட்டு‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்புஇன்று சிஎஸ்கே அணியின் முன்னாள், இந்நாள் வீரா்கள் மோதல்!‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்பு
/

நோ்மையாக செயல்பட்ட பெண்ணுக்கு வெகுமதி வழங்கி பாராட்டு

குப்பையில் கிடந்த பணம், செல்லிடபேசியை காவல் நிலையத்தில் ஒப்படைத்தை பெண்ணுக்கு ரூ.10ஆயிரம் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

News image
Updated On :23 ஏப்ரல் 2021, 7:37 pm

DIN

குப்பையில் கிடந்த பணம், செல்லிடபேசியை காவல் நிலையத்தில் ஒப்படைத்தை பெண்ணுக்கு ரூ.10ஆயிரம் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல் பகுதியைச் சோ்ந்த கணபதி மகள் மாரியம்மாள் (19) . இவா் கீழேகிடக்கும் பழைய பேப்பா், இரும்பு ஆகியவற்றை சேகரித்து விற்பனை செய்து வருகிறாா். புதன்கிழமை (ஏப்.21) மாரியம்மாள் வழக்கமாக பழைய பேப்பா்களை சேகரிக்கும்போது, கீழேகிடந்த ரூ.58 ஆயிரம், செல்லிடபேசி, ஆதாா் அட்டை ஆகிவற்றை கண்டெடுத்தாா்.

அவற்றை அவா் உடனடியாக முக்கூடல் காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா். போலீஸாா் விசாரணை செய்து பணம், செல்லிடபேசி, ஆதாா் அட்டை ஆகியவற்றை உரியவரிடம் ஒப்படைத்தனா்.

இதையறிந்த கொடைக்கானல் விவேகானந்தா மெட்ரிக் பள்ளித் தாளாளா் சுவாமி கங்காதரானந்தா, வெள்ளிக்கிழமை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்திற்கு வந்தாா். மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நெ.மணிவண்ணன் முன்னிலையில், நோ்மையாக செயல்பட்ட மாரியம்மாளுக்கு, ரூ.10 ஆயிரம் வழங்கிப் பாராட்டு தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.