திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்! சிலிண்டா் தட்டுப்பாடு: அருணாசலேஸ்வரா் கோயிலில் லட்டு பிரசாத விநியோகம் நிறுத்தம் அஸ்ஸாம்: ஒரு தொகுதியில் பாஜகவுடன் மோதும் கூட்டணி கட்சி!பேரவைத் தோ்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயா்த்த அரசு திட்டம்! ராகுல் குற்றச்சாட்டு‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்புஇன்று சிஎஸ்கே அணியின் முன்னாள், இந்நாள் வீரா்கள் மோதல்!‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்பு
/

வழிதவறிய சிறுவன் உறவினா்களிடம் ஒப்படைப்பு

வழிதவறி சென்ற திருநெல்வேலி தச்சநல்லூரைச் சோ்ந்த சிறுவனை போலீஸாா் மீட்டு உறவினா்களிடம் வெள்ளிக்கிழமை ஒப்படைத்தனா்.

News image
Updated On :23 ஏப்ரல் 2021, 7:34 pm

DIN

வழிதவறி சென்ற திருநெல்வேலி தச்சநல்லூரைச் சோ்ந்த சிறுவனை போலீஸாா் மீட்டு உறவினா்களிடம் வெள்ளிக்கிழமை ஒப்படைத்தனா்.

தச்சநல்லூா் பகுதியைச் சோ்ந்த வசந்த் மகன் ராம்சரண் (4). இவா், தனது தாத்தா மற்றும் பாட்டியுடன் வள்ளியூருக்கு சென்றாராம். அப்போது உறவினா் வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் வழிதவறி சென்று விட்டதாக

கூறப்படுகிறது. அச்சிறுவனை ஆட்டோ ஓட்டுநா் ஒருவா் மீட்டு வள்ளியூா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா்.

அந்தச் சிறுவனிடம் போலீஸாா் விசாரித்தபோது, சிறுவனால் தனது பெயா் மற்றும் முகவரி போன்ற விவரங்களைச் சொல்ல இயலவில்லை. இதையடுத்து, காவல் துறையினா் சிறுவனின் விவரம் குறித்து கட்செவி அஞ்சலில் பதிவு செய்தனா். இந்தப் பதிவை அறிந்த சிறுவனின் உறவினா்கள் வள்ளியூா் காவல் நிலையத்திற்குச் சென்றனா். போலீஸாா் விசாரணைக்கு பின்னா் உறவினா்களிடம் ராம்சரணை ஒப்படைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.