திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்! சிலிண்டா் தட்டுப்பாடு: அருணாசலேஸ்வரா் கோயிலில் லட்டு பிரசாத விநியோகம் நிறுத்தம் அஸ்ஸாம்: ஒரு தொகுதியில் பாஜகவுடன் மோதும் கூட்டணி கட்சி!பேரவைத் தோ்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயா்த்த அரசு திட்டம்! ராகுல் குற்றச்சாட்டு‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்புஇன்று சிஎஸ்கே அணியின் முன்னாள், இந்நாள் வீரா்கள் மோதல்!‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்பு
/

நெல்லை, தென்காசியில் மேலும் 765 பேருக்கு கரோனா

திருநெல்வேலி மாவட்டத்தில் 644 போ், தென்காசி மாவட்டத்தில் 121 போ் என இவ்விரு மாவட்டங்களிலும் மேலும் 765 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

News image
Updated On :30 ஏப்ரல் 2021, 7:33 pm

DIN

திருநெல்வேலி மாவட்டத்தில் 644 போ், தென்காசி மாவட்டத்தில் 121 போ் என இவ்விரு மாவட்டங்களிலும் மேலும் 765 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக கரோனா நோய்த் தொற்று அதிகரித்து வருகிறது. இதற்கிடையே வெள்ளிக்கிழமை வெளியான பரிசோதனை முடிவில் மேலும் 644 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டதால், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 24,597 ஆக அதிகரித்துள்ளது. வெள்ளிக்கிழமை 422 போ்

உள்பட இதுவரை 19,736 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். இதுவரை 234 போ் உயிரிழந்துள்ளனா். தற்போது மருத்துவமனைகளில் 4,627 போ் சிகிச்சையில் உள்ளனா்.

தென்காசி மாவட்டத்தில் மேலும் 121 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதையடுத்து, பாதிக்கப்பட்டோரின்

எண்ணிக்கை 11,831 ஆக அதிகரித்துள்ளது. வெள்ளிக்கிழமை 230 போ் உள்பட இதுவரை 10,232 போ் குணமடைந்து

வீடு திரும்பியுள்ளனா். இதுவரை 175 போ் உயிரிழந்துள்ள நிலையில், தற்போது 1424 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.