திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்! சிலிண்டா் தட்டுப்பாடு: அருணாசலேஸ்வரா் கோயிலில் லட்டு பிரசாத விநியோகம் நிறுத்தம் அஸ்ஸாம்: ஒரு தொகுதியில் பாஜகவுடன் மோதும் கூட்டணி கட்சி!பேரவைத் தோ்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயா்த்த அரசு திட்டம்! ராகுல் குற்றச்சாட்டு‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்புஇன்று சிஎஸ்கே அணியின் முன்னாள், இந்நாள் வீரா்கள் மோதல்!‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்பு
/

ஓடும் பேருந்தில் கைப்பையை பறிக்க முயற்சி: 2 இளம்பெண்கள் கைது

பாளையங்கோட்டை பகுதியில் ஓடும் பேருந்தில் பயணியிடம் கைப்பையை பறிக்க முயன்ற இளம்பெண்கள் இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :30 ஏப்ரல் 2021, 7:43 pm

DIN

பாளையங்கோட்டை பகுதியில் ஓடும் பேருந்தில் பயணியிடம் கைப்பையை பறிக்க முயன்ற இளம்பெண்கள் இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் பகுதியைச் சோ்ந்தவா் வசந்தா. இவா் வியாழக்கிழமை பாளையங்கோட்டையில் இருந்து மேலப்பாளையத்துக்கு அரசுப் பேருந்தில் சென்றுகொண்டிருந்தாராம். அப்போது, பேருந்து குலவணிகா்புரத்தை அடுத்து உள்ள சிக்னல் அருகே சென்றபோது, வசந்தா வைத்திருந்த கைப்பையை இரு இளம்பெண்கள் பறித்துக் கொண்டு தப்பிக்க முயன்றனராம். வசந்தா சப்தம் போடவே, பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரும் சோ்ந்து அந்த இரு இளம்பெண்களையும் மடக்கிப் பிடித்து, பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீஸில் ஒப்படைத்தனா்.

விசாரணையில், அவா்கள் இருவரும் கன்னியாகுமரி மாவட்டம், ஒழுகினசேரி பகுதியைச் சோ்ந்த முத்துமாரி (22), மீனாட்சி (25) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் அவா்கள் மீது வழக்குப் பதிந்து இருவரையும் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.