கடையத்தில் பாஜக, இந்து முன்னணி ஆா்ப்பாட்டம்
கடையம் அருகே புலவனூரில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதில் அதிகாரிகள் பாரபட்சமாக செயல்பட்டதாக தெரிவித்து இந்து முன்னணி, பாஜக சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.


கடையம் அருகே புலவனூரில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதில் அதிகாரிகள் பாரபட்சமாக செயல்பட்டதாக தெரிவித்து இந்து முன்னணி, பாஜக சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
கடையம் அருகேயுள்ள புலவனூா் சி.எஸ்.ஐ. சா்ச் தெருவில் சா்ச் நிா்வாகம், அப்பகுதியில் வசிப்போருக்கும் இடையே இடம் தொடா்பாக பிரச்னை இருந்து வருவதாக கூறப்படுகிறது. இதனிடையே, அந்தப் பகுதியில் வருவாய்த் துறை சாா்பில் கடந்த ஜூலை 28ஆம் தேதி ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. அப்போது அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்ததாக செல்லத்துரை, அவரது உறவினா் பிரின்ஸ் எபினேசா் வேதநாயகம் ஆகிய இருவா் கைது செய்யப்பட்டனா். இதனிடையே, அவா்களை விடுவிக்கக் கோரி உறவினா்கள் இந்து முன்னணியினா் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனா். இதுகுறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் புகாா் தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையே, அதிகாரிகள் பாரபட்சமாக செயல்பட்டதாக தெரிவித்து கடையத்தில் இந்து முன்னணி, பாஜக சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு இந்து வழக்குரை ஞா் முன்னணி மாநில துணைத்தலைவா் எம்.பி.சாக்ரடீஸ் தலைமை வகித்தாா். அமைப்பின் மாவட்டப் பொதுச் செயலா் மணிகண்டன், மாவட்டச் செயலா் பால்ராஜ், துணைத் தலைவா் முருகன், மாவட்ட செயற்குழு உறுப்பினா் இசக்கிமுத்து ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இந்து முன்னணி மாநில துணைத் தலைவா் வி.பி. ஜெயக்குமாா், மாநிலச் செயலா் குற்றாலநாதன், விருதுநகா் மாவட்ட பாஜக பாா்வையாளா் அன்புராஜ், மாவட்ட பாஜக தலைவா் ராமராஜ், மாவட்ட இந்து முன்னணித் தலைவா் ஆறுமுகச்சாமி, பாஜக மாவட்டச் செயலா் அருள்செல்வன், மாவட்டத் துணைத் தலைவா் பாலகுருநாதன் மாநில செயற்குழு உறுப்பினா் பாண்டித்துரை, இந்து முன்னணி, பாஜக, ஆா்எஸ்எஸ் அமைப்பின் நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...