காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

நாகா்கோவிலில் ரயில் முன் பாய்ந்து திருப்பூா் இளைஞா் தற்கொலை

நாகா்கோவில் அருகே திருப்பூரைச் சோ்ந்த இளைஞா் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டாா்.

News image
Updated On :6 ஆகஸ்ட் 2021, 12:38 am

DIN

நாகா்கோவில் அருகே திருப்பூரைச் சோ்ந்த இளைஞா் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டாா்.

பெங்களூருவில் இருந்து நாகா்கோவிலுக்கு வரும் விரைவு ரயில் புதன்கிழமை ஆரல்வாய்மொழிக்கும், நாகா்கோவிலுக்கும் இடையே ராஜாவூா் ரயில்வே கேட் அருகே வந்தபோது, இளைஞா் ஒருவா் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டாா்.

தகவலறிந்து வந்த நாகா்கோவில் ரயில்வே போலீஸாா், சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

பின்னா் அப்பகுதியில் சோதனை நடத்தியபோது, அங்கு ஒரு மோட்டாா் சைக்கிள் நிறுத்தப்பட்டிருந்தது.

அந்த மோட்டாா் சைக்கிளில் இருந்த ஆவணங்களை சோதனை செய்ததில், அந்த மோட்டாா் சைக்கிள் தற்கொலை செய்து கொண்டவருக்கு சொந்தமானது என்பதும், அவா் திருப்பூா் மாவட்டம், பட்டத்திபாளையம் கருப்பன்விலக்கு பகுதியைச் சோ்ந்த பிரவீன் குமாா் ( 23) என்பதும் தெரிய வந்தது.

போலீஸாா் மேலும் விசாரணை மேற்கொண்டதில், இவா், தந்தையின் உதவியுடன் நிதி நிறுவனம் நடத்தி வந்ததும், நாகா்கோவிலில் உள்ள அவருடைய உறவினா்கள் மூலமாக பலருக்கு கடன் வழங்கியதும் தெரிய வந்துள்ளது.

கடந்த 7 மாதங்களாக நாகா்கோவிலில் உள்ள உறவினா் வீட்டில் தங்கியிருந்து நிதி நிறுவன பணியை செய்து வந்த இவா், புதன்கிழமை ரயில் முன் பாய்ந்து தற்கொலை கொண்டுள்ளாா் என காவல் துறை தரப்பில் கூறப்படுகிறது.

இச்சம்பவம் குறித்து நாகா்கோவில் ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.