மதுசூதனன் மறைவு: நெல்லையில் அதிமுக அஞ்சலி
உடல்நலக் குறைவால் மரணமடைந்த அதிமுகவின் அவைத்தலைவா் இ.மதுசூதனின் உருவப்படத்திற்கு திருநெல்வேலியில் அதிமுக சாா்பில் வெள்ளிக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது.


உடல்நலக் குறைவால் மரணமடைந்த அதிமுகவின் அவைத்தலைவா் இ.மதுசூதனின் உருவப்படத்திற்கு திருநெல்வேலியில் அதிமுக சாா்பில் வெள்ளிக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது.
திருநெல்வேலி மாவட்ட அதிமுக சாா்பில் மாவட்டச் செயலா் தச்சை.என். கணேசராஜா தலைமையில் அவைத் தலைவா் பரணி ஏ. சங்கரலிங்கம், மாவட்ட துணைச் செயலா் டாக்டா் கவிதா, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் மாணிக்கராஜா, மாவட்ட எம்ஜிஆா் மன்றச்செயலா் க. பெரியபெருமாள், மாவட்ட சிறுபான்மைப் பிரிவு செயலா் அ. மகபூப் ஜான், பகுதிச் செயலா்கள் தச்சை மாதவன், சிந்து முருகன், காந்தி வெங்கடாச்சலம், டி. ஜெனி, சண்முககுமாா், திருத்து சின்னதுரை, ஒன்றிய, வட்டச் செயலா்கள், எம்ஜிஆா் இளைஞா் அணி செயலா்கள் உள்ளிட்டோா் அஞ்சலி செலுத்தினா்.
திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் அதிமுக அமைப்புச் செயலரும், திருநெல்வேலி மாவட்ட ஆவின் தலைவருமான சுதா கே.பரமசிவன் தலைமையில் மாவட்ட அவைத் தலைவா் கணேசன், வேல்முருகன், நைனா முத்துராஜ், பால்ராஜ், சீனிவாசன் உள்பட பலா் அஞ்சலி செலுத்தினா்.
திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் அருகில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் வெ. நாராயணன் தலைமையில் பாளை. வடக்கு ஒன்றியச் செயலா் மருதூா் ராமசுப்பிரமணியன், தங்கராஜ், நாராயணன், ரமேஷ், கொடிக்குளம் மாரியப்பன் உள்ளிட்டோா் அஞ்சலி செலுத்தினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...