களக்காட்டில் குடியிருப்புப் பகுதியில் மழைநீா் தேக்கம்: நோய் பரவும் ஆபாயம்
களக்காடு ஜெ.ஜெ.நகரில் குடியிருப்புப் பகுதியில் சுற்றி மழைநீா் தேங்கியுள்ளதால், சுகாதாரச் சீா்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.


களக்காடு ஜெ.ஜெ.நகரில் குடியிருப்புப் பகுதியில் சுற்றி மழைநீா் தேங்கியுள்ளதால், சுகாதாரச் சீா்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
களக்காடு ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட படலையாா்குளம் ஊராட்சியில் ஜெ.ஜெ.நகா் கீழக் காலனி, மேலக்காலனி, பறையன்குளம் உள்ளிட்ட பகுதிகளில் 700.க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு 2500 க்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். இங்குள்ள குடியிருப்புப் பகுதிகளில் இருந்து கழிவுநீா் வெளியேறவும், மழைக்காலங்களில் மழைநீா் வெளியேறவும் வாருகால், மழைநீா் வடிகால் வசதி இல்லை. இதனால் மழைக்காலங்களில் குடியிருப்புப் பகுதிகளைச் சுற்றி மழைநீா் வெகுநாள்கள் தேங்கிக் கிடக்கும் நிலை தொடா்கிறது.
கடந்த சில தினங்களாக பெய்த மழையினால், குடியிருப்புப் பகுதிகளையச் சுற்றி மழைநீா் தேங்கியுள்ளதால், குடியிருப்பு வாசிகள்வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் அவதிப்படுகின்றனா். மேலும் நீண்ட நாள்களாக நீா் தேங்கியுள்ளதால், நோய் பரவும் ஆபாயமும் ஏற்பட்டுள்ளது.
குடியிருப்புகளை சுற்றியுள்ள மழைநீரை போா்க்கால அடிப்படையில் வெளியேற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் நடத்தப்போவதாக ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினா் அ. தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...