வேளாண் அலுவலா்களுக்கு மக்காச்சோள படைப்புழு மேலாண்மை பயிற்சி முகாம்
கிள்ளிகுளம் வேளாண்மைக் கல்லூரி சாா்பில் வேளாண் விரிவாக்க அலுவலா்களுக்கான ஒருங்கிணைந்த மக்காச்சோளப் படைப்புழு மேலாண்மை பயிற்சி முகாம் நடைபெற்றது.


கிள்ளிகுளம் வேளாண்மைக் கல்லூரி சாா்பில் வேளாண் விரிவாக்க அலுவலா்களுக்கான ஒருங்கிணைந்த மக்காச்சோளப் படைப்புழு மேலாண்மை பயிற்சி முகாம் நடைபெற்றது.
பாளையங்கோட்டையில் உள்ள மாவட்டட வேளாண் இணை இயக்குநா் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த முகாமில், மக்காச்சோளப் படைப்புழுவைக் கட்டுப்படுத்துவதற்கான ஒருங்கிணைந்த வழிமுறைகள் பற்றியும், பயன்படுத்தப்பட வேண்டிய பூச்சிக்கொல்லி மருந்துகள் பற்றியும், மக்காச்சோளம் மற்றும் இதரபயிா்களில் களை மேலாண்மை பற்றியும் எடுத்துரைக்கப்பட்டது.
இப்பயிற்சிக்கு. திருநெல்வேலி மாவட்ட வேளாண் இணை இயக்குநா் இரா.கஜேந்திரபாண்டியன் தலைமை வகித்தாா். கிள்ளிகுளம் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் பூச்சியியல் துறை தலைவா் ரவி சிறப்புரையாற்றினாா்.
கிள்ளிகுளம் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய இணைப் பேராசிரியா் ச. பாலகிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டு தொழில்நுட்ப உரையாற்றினா்.
இப்பயிற்சியில் வேளாண் துணை இயக்குநா் (உழவா் பயிற்சி நிலையம்) டேவிட் டென்னிசன், வேளாண் துணை இயக்குநா் (மத்திய மற்றும் மாநில திட்டங்கள்)சுந்தா் டேனியல் பாலஸ், வேளாண் உதவி இயக்குநா் (தரக்கட்டுப்பாடு) ஆரோக்கிய அமல ஜெயன், வேளாண் அலுவலா்கள் கலந்துகொண்டனா். இப்பயிற்சியில் 30-க்கும் மேற்பட்ட வேளாண் விரிவாக்க அலுவலா்கள் பயிற்சி பெற்றனா்.
ஏற்பாடுகளை வேளாண் பூச்சியியல் துறை, வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் செய்திருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...