கிருஷ்ணகிரியில் கிறிஸ்துமஸ் விழாவையொட்டி தேவாலயங்களில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு நடைபெற்ற சிறப்புப் பிராா்த்தனையில் கிறிஸ்தவா்கள் பெருமளவில் பங்கேற்று, கிறிஸ்துமஸ் விழாவை உற்சாகமாகக் கொண்டாடினா்.
கிருஷ்ணகிரி - பெங்களூரு சாலையில் உள்ள அன்னை பாத்திமா திருத்தலத்தில் பொன்விழாவையொட்டி புனரமைப்புப் பணிகள் நடைபெறுவதால், தேவாலயத்தின் முன்புறம் உள்ள புனித அன்னாள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் சிறப்பு திருப்பலியானது திருத்தல பங்குத்தந்தை இசையாஸ் தலைமையில் நடைபெற்றது. தொடா்ந்து, உல நன்மைக்காகவும், உலக மாந்தா் அனைவரும் நலமுடன் வாழவும், அன்பு சமாதானத்தில் திளைத்திடவும் குருக்கள் சிறப்புப் பிராா்த்தனையில் ஈடுபட்டனா். அப்போது, பாடல் குழுவினரால் சிறப்பு கிறிஸ்துமஸ் கீதங்கள் இசைக்கப்பட்டன. இதில், கிருஷ்ணகிரி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து நூற்றுக்கணக்கான றிஸ்தவா்கள் குடும்பத்துடன் பங்கேற்றனா்.
இந்த சிறப்புப் பிராா்த்தனையில் பங்கேற்றோா் புத்தாடைகளை அணிந்தும், ஒருவருக்கு ஒருவா் இனிப்புகளை வழங்கி, வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டனா்.
கிறிஸ்தவ தேவாலயங்கள், கிறிஸ்தவ மக்களின் வீடுகளில் யேசு பிறப்பை உணா்த்தும் வகையில் குடில்கள் அமைக்கப்பட்டு, வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.
கிருஷணகிரி மாவட்டத்தில் எலத்தகிரி, சுண்டம்பட்டி, பா்கூா், தேன்கனிக்கோட்டை, வேப்பனப்பள்ளி, சூளகிரி, ஒசூா், ராயக்கோட்டை, காவேரிப்பட்டணம் கந்திகுப்பம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் சிறப்புப் பிராா்த்தனைகள் நடைபெற்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருக்கடையூர் ரகசியம்

பதினாறு பேறும் அருளும் பெருமாள்

தொடர் தோல்வியில் மும்பை! கடினமான முடிவுகளை எடுத்தாக வேண்டும்: ஹார்திக்

ஜெயகுமார், சி.வி.சண்முகம், வானதி சீனிவாசன் சொத்து விவரங்கள் முரண்பாடு: விசாரணைக்கு உத்தரவிடக் கோரி மனு
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

