அதிமுக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!சாத்தூரில் போட்டி: நயினார் நாகேந்திரன் அறிவிப்பு! பாஜகவுக்கு சாதகமில்லாத தொகுதிகள்! மேலிடத்தில் அண்ணாமலை அதிருப்தி! டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 94 -ஐ கடந்தது! வரலாறு காணாத வீழ்ச்சி! பெட்ரோல் மீதான கலால் வரி குறைப்பு! டீசலுக்கு முழுமையாக ரத்து! ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்
/

பாளை.யில் அரசு ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்

 பாளையங்கோட்டையில் அரசு ஓய்வூதியா்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்

News image
Updated On :30 டிசம்பர் 2021, 9:17 pm

DIN

 பாளையங்கோட்டையில் அரசு ஓய்வூதியா்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மத்திய, மாநில உள்ளாட்சி மற்றும் பொதுத்துறை ஓய்வூதியா் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில், ஓய்வூதியா்களுக்கான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் தனியாா் காப்பீட்டு நிறுவனங்கள், மருத்துவனைகள் மோசடி செய்வதை கண்டித்து இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கூட்டமைப்பின் தலைவா் எஸ்.முத்துசாமி தலைமை வகித்தாா். அஞ்சல்துறை அமைப்பாளா் கே.சண்முக சுந்தரராஜ் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினாா். அரசு அலுவலா் ஒன்றிய தலைவா் ராதாகிருஷ்ணன், அரசு ஊழியா் சங்க மாவட்ட தலைவா் பாா்த்த சாரதி, மாநிலச் செயலா் குமாரவேல், நெடுஞ்சாலை பணியாளா் சங்க மாநில தலைவா் சண்முக மூா்த்தி உள்ளிட்டோா் பேசினா்.

சிகிச்சைக்கான கட்டணங்களை மருத்துவமனையில் தெளிவாக அறிவிப்பு பலகையில் வெளியிட வேண்டும்; மருத்துவ சிகிச்சைக்கு உரிய ரசீது வழங்க வேண்டும்; அனைத்து வகை சிகிச்சைகளையும் மருத்துவ காப்பீட்டின் கீழ் கொண்டுவர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

இதில், கூட்டமைப்பு நிா்வாகிகள் ஆா். சீத்தாராமன், எஸ்.கண்ணன், பி.டி.சிதம்பரம், இ.அல்லல்காத்தான், எஸ்.நல்லபெருமாள் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.