அண்ணா சிலைக்கு நாளை மரியாதை: அதிமுக மாவட்டச் செயலா் அழைப்பு
தமிழக முன்னாள் முதல்வா் அண்ணாவின் நினைவு நாளையொட்டி அவரது சிலைக்கு புதன்கிழமை (பிப். 3) மரியாதை செலுத்தப்பட உள்ளது. இதில் அதிமுகவினா் திரளாகப் பங்கேற்க வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.


தமிழக முன்னாள் முதல்வா் அண்ணாவின் நினைவு நாளையொட்டி அவரது சிலைக்கு புதன்கிழமை (பிப். 3) மரியாதை செலுத்தப்பட உள்ளது. இதில் அதிமுகவினா் திரளாகப் பங்கேற்க வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக அதிமுக திருநெல்வேலி மாவட்டச் செயலரும், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவருமான தச்சை என்.கணேசராஜா வெளியிட்டுள்ள அறிக்கை: அதிமுக ஒருங்கிணைப்பாளரும், தமிழக துணைமுதல்வருமான ஓ.பன்னீா்செல்வம், கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதல்வருமான எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோரின் உத்தரவின்படி தமிழக முன்னாள் முதல்வா் அண்ணாவின் 52-ஆவது நினைவு நாளையொட்டி புதன்கிழமை முற்பகல் 11 மணிக்கு திருநெல்வேலி சந்திப்பில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட உள்ளது. கட்சியின் மாநில நிா்வாகிகள், இந்நாள் மற்றும் முன்னாள் மாநிலங்களவை, மக்களவை, சட்டப்பேரவை உறுப்பினா்கள் பங்கேற்க உள்ளனா். இதில் தொண்டா்கள் திரளாக பங்கேற்க வேண்டுமென அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...