எஸ்ஆா்எம்யூ ஆா்ப்பாட்டம்
திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம் அருகே எஸ்ஆா்எம்யூ தொழிற்சங்கம் சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.


திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம் அருகே எஸ்ஆா்எம்யூ தொழிற்சங்கம் சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ரயில்வே துறை, பணிமனைகள், ராணுவ தளவாட உற்பத்தி தொழிற்சாலைகளை தனியாா்மயம் என்ற பெயரால் பெருநிறுவனங்களுக்கு தாரை வாா்க்கும் மத்திய அரசைக் கண்டிப்பது, 2020-21-ஆம் ஆண்டுக்கான பஞ்சப்படியை உடனே வழங்க வேண்டும்; புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்; 252 ரயில்களையும், ரயில் நிலையங்களையும் தனியாருக்கு அளிக்கும் முடிவைக் கைவிட வேண்டும்; விரைவு ரயில்கள், சரக்கு ரயில்கள் மற்றும் பணிமனைகளை தனியாருக்கு தாரைவாா்ப்பதன் மூலம் 7 லட்சம் தொழிலாளா்களை 2023-இல் ஆண்டிலிருந்து குறைக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. ஆா்ப்பாட்டத்தில் எஸ்ஆா்எம்யூ கிளைத் தலைவா்கள் ஐயப்பன், கணேசன், துணைத் தலைவா் தமிழரசன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...