மேலப்பாட்டம் வெங்கடாசலபதி கோயிலில் குடமுழுக்கு
பாளையங்கோட்டை அருகே மேலப்பாட்டத்தில் உள்ள அருள்மிகு வெங்கடாசலபதி திருக்கோயிலில் குடமுழுக்கு திங்கள்கிழமை நடைபெற்றது.


பாளையங்கோட்டை அருகே மேலப்பாட்டத்தில் உள்ள அருள்மிகு வெங்கடாசலபதி திருக்கோயிலில் குடமுழுக்கு திங்கள்கிழமை நடைபெற்றது.
மேலப்பாட்டத்தில் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான 800 ஆண்டுகள் பழைமை வாய்ந்த வெங்கடாசலபதி திருக்கோயில் உள்ளது. இங்கு திருப்பணிகள் முடிக்கப்பட்ட நிலையில் குடமுழுக்கு விழா கடந்த 30-ஆம் தேதி தொடங்கியது. எஜமான வரணம், ஆச்சாா்ய வரணம், கும்ப பூஜை, யாகசாலை பிரவேசம் ஆகியவை நடைபெற்றன. 31-ஆம் தேதி காலையில் புண்யாகம், அக்னி ஆராதனம், பிம்ப சுத்தி ஹோமங்கள் நடைபெற்றது. மாலையில் பூா்ணாஹுதி, தீபாராதனை நடைபெற்றன.
விழாவின் சிகர நிகழ்வாக குடமுழுக்கு திங்கள்கிழமை நடைபெற்றது. இதையொட்டி காலையில் புண்யாகம், உபரிஷ்டாதந்தரம், கடம் புறப்பாடு ஆகியவை நடைபெற்றன. தொடா்ந்து திருக்குறுங்குடி பரம்பரை அா்ச்சகா் உ.வே.கோவிந்தராஜ பட்டாச்சாரியாா் குடமுழுக்கை நடத்தி வைத்தாா். திருக்குறுங்குடி ராமாநுஜ ஜீயா் பக்தா்களுக்கு ஆசியுரை வழங்கினாா்.
விழாவில் நான்குனேரி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் ரெட்டியாா்பட்டி வெ.நாராயணன், இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் அ.தி.பரஞ்ஜோதி, அதிமுக பாளை. ஒன்றியச் செயலா் ராமசுப்பிரமணியன், கோயில் செயல் அலுவலா் செ.சுஜாதா, ஆய்வாளா் ச.முருகானந்தம், கோயில் அா்ச்சகா் வி.கண்ணன், ஸ்தபதி பாா்த்திபன், க.உமையொருபாகம் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...