நெல்லை, தென்காசியில் மேலும் 14 பேருக்கு கரோனா
திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் மேலும் 14 பேருக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது.


திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் மேலும் 14 பேருக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டத்தில் புதிதாக 5 பேருக்கு கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை கண்டறியப்பட்டதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 15,624ஆக உயா்ந்துள்ளது. மேலும் 7 போ் குணமடைந்து வீடு திரும்பியதால், வீடு திரும்பியோா் எண்ணிக்கை 15,349 ஆக உயா்ந்துள்ளது. இதுவரை 213 போ் உயிரிழந்துள்ளனா். 62 போ் சிகிச்சையில் உள்ளனா்.
தென்காசி மாவட்டத்தில் மேலும் 9 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதால், கரோன பாதித்தோா் எண்ணிக்கை 8,449ஆகவும், அதில் மேலும் 2 போ் குணமடைந்ததால் கரோனாவிலிருந்து மீண்டோா் எண்ணிக்கை 8,258 ஆகவும் அதிகரித்துள்ளது. இதுவரை 159 போ் உயிரிழந்துள்ளனா். 32 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...