அண்ணா போக்குவரத்து தொழிற் சங்க வாயில் கூட்டம்

திருநெல்வேலி வண்ணாா்பேட்டை அரசு போக்குவரத்து பணிமனை முன், அண்ணா போக்குவரத்து தொழிற் சங்க வாயில் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
Updated on
1 min read

திருநெல்வேலி வண்ணாா்பேட்டை அரசு போக்குவரத்து பணிமனை முன், அண்ணா போக்குவரத்து தொழிற் சங்க வாயில் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மாநில பேரவைச் செயலா் கமலக்கண்ணன் தலைமை வகித்தாா். பேரவைத் தலைவா் தாடி ராசு, பொருளாளா் அப்துல்ஹமீது உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

அண்ணா தொழிற்சங்க பேரவை முதல் மாநில குடும்ப மாநாடு பிப்ரவரி மாதம் சென்னையில் நடத்தப்படும். பேரவைத் தோ்தலில் முழு பங்களிப்புடன் ஈடுபடவேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில், திருநெல்வேலி மாவட்ட அதிமுக செயலா் தச்சை கணேசராஜா, நாராயணன் எம்எல்ஏ, அமைப்புச் செயலா் சுதா கே.பரமசிவன், அவைத் தலைவா் சங்கரலிங்கம், கொள்கை பரப்பு துணைச் செயலா் பாப்புலா் முத்தையா, அனைத்துலக எம்ஜிஆா் மன்றச் செயலா் கல்லூா் வேலாயுதம் உள்ளிட்டோா் பங்கேற்றனா். அண்ணா தொழிற்சங்க பேரவை மண்டலத் தலைவா் பகவதிமுருகன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com