பொங்கல் பண்டிகையையொட்டி, களக்காடு தலையணை 9 மாதங்களுக்குப் பின் புதன்கிழமை (ஜன.13) திறக்கப்படுகிறது.
திருநெல்வேலி மாவட்டம் களக்காடு தலையணை கரோனா தடுப்பு பொது முடக்கம் காரணமாக கடந்த மாா்ச் மாத இறுதியில் தலையணை மூடப்பட்டு, அதில் குளிக்க சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில், காணும் பொங்கல் தினத்தில் தலையணை, திருக்குறுங்குடி மலை நம்பிகோயிலில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடுவது வழக்கம் என்பதால், மேற்கூறிய இரு இடங்களுக்கும் புதன்கிழமை (ஜன. 13) முதல் சுற்றுலாப் பயணிகள் செல்வதற்கு வனத்துறையினா் அனுமதி வழங்கினா். எனினும், சுற்றுலாப் பயணிகள் மதுபாட்டில், பிளாஸ்டிக் பைகள், கத்தி உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருள்களை கொண்டுவரக்கூடாது; காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படுவா்; வயோதிகா்கள், கா்ப்பிணிகள், சிறாா்கள் இங்கு வருவதைத் தவிா்க்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனா்.
இதனிடையே, மலைப் பகுதியில் கடந்த சில தினங்களாக தொடா்மழை பெய்து வருவதால் தலையணை பச்சை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. எனவே, வெள்ளம் தணியும் வரை அதில் குளிக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.