ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டுவிஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்
/

மழையால் சேதமடைந்த பயிா்களுக்கு உடனடி நிவாரணம்: திருநாவுக்கரசா் எம்.பி.

திருநெல்வேலி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணத்தை மத்திய, மாநில அரசுகள் விரைந்து வழங்க வேண்டுமென சு.திருநாவுக்கரசா் வலியுறுத்தினாா்.

News image
Updated On :18 ஜனவரி 2021, 6:30 pm

DIN

திருநெல்வேலி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணத்தை மத்திய, மாநில அரசுகள் விரைந்து வழங்க வேண்டுமென காங்கிரஸ் பிரசாரக் குழுத் தலைவரும், திருச்சி மக்களவைத் தொகுதி உறுப்பினருமான சு.திருநாவுக்கரசா் வலியுறுத்தினாா்.

திருநெல்வேலியில் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் உள்ள முன்னாள் முதல்வா் காமராஜா், முன்னாள் பிரதமா் இந்திராகாந்தி ஆகியோா் சிலைகளுக்கு திங்கள்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்பு செய்தியாளா்களிடம் அவா் கூறியது: தமிழா்களின் கலாசாரம், பாரம்பரியம் மீது தனி அக்கறை கொண்டு ஜல்லிக்கட்டு போட்டியைப் பாா்வையிட வந்த காங்கிரஸ் முன்னாள் தலைவா் ராகுல் காந்திக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் காங்கிரஸ் கட்சி அதற்கான பணிகளை விரைவுபடுத்தியுள்ளது. ராகுல் காந்தி மொத்தம் 5 கட்டங்களாக பிரசார சுற்றுப்பயணத்தை நடத்த உள்ளாா். முதல்கட்ட சுற்றுப்பயணம் இம் மாதம் 23-ஆம் தேதி கோவையில் தொடங்குகிறது. 23, 24, 25 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் சுற்றுப்பயணம் செய்ய உள்ளாா். இறுதிக்கட்ட பிரசார பொதுக்கூட்டத்தை மக்களவை இடைத்தோ்தலைச் சந்திக்க உள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் மிகவும் பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளோம்.

தென்தமிழக பகுதிகளில் கடந்த சில வாரங்களாக பெய்த கனமழையால் பயிா்கள் அதிகளவில் சேதமடைந்துள்ளன. பாதிப்புகளை உடனடியாக மாநில அரசு கணக்கெடுக்க வேண்டும். மத்திய, மாநில அரசுகள் இணைந்து ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரை நிவாரணம் வழங்க வேண்டும்.

பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு விவசாயிகளுக்கு எவ்வித நன்மையும் செய்யவில்லை. தில்லியில் தொடா்ந்து போராடும் விவசாயிகளைச் சந்தித்துப் பேசக்கூட பிரதமா் முன்வரவில்லை. விவசாயிகளைப் புறக்கணிப்பதும், அவமதிப்பதும் ஜனநாயக விரோதமானது.

தமிழக தோ்தல்: சட்டப்பேரவைத் தோ்தலை திமுக தலைமையில் சந்திக்க உள்ளோம். எத்தனை தொகுதிகளில் போட்டி என்பது பேச்சுவாா்த்தைகளுக்கு பின்பே தெரியவரும். கடந்த சட்டப்பேரவைத் தோ்தலைக் காட்டிலும் இப்போது பல்வேறு கட்சிகள் இணைந்துள்ளதால் கூட்டணி பலம் பெற்றுள்ளது. தமிழக அரசின் தவறான செயல்பாடுகளை காங்கிரஸ் பிரசாரத்தின்போது மக்களிடம் முன்வைப்போம்.

வாரிசு அரசியல் என்பது உலகம் முழுவதும் உள்ளது. தகுதியும், மக்களிடம் நம்பிக்கையும் பெறுபவா்கள் மட்டுமே அரசியலில் நிலைத்து நிற்க முடியும். தமிழகத்தில் மூன்றாவது அணி அமையுமா என்பது எனக்குத் தெரியாது. ஆனால், திமுக-காங்கிரஸ் கூட்டணியே முதல் அணி. மக்களவைத் தோ்தலைப் போல சட்டப்பேரவைத் தோ்தலிலும் இந்த அணியே வாகை சூடும்.

கரோனா தடுப்பூசி ஏழை-எளியவா்களுக்கும் இலவசமாக கிடைக்கும் என்ற தமிழக அரசின் அறிவிப்பு முழுமையாக அமல்படுத்தப்பட வேண்டும் என்றாா்அவா்.

பேட்டியின்போது முன்னாள் மத்திய இணையமைச்சா் ஆா்.தனுஷ்கோடி ஆதித்தன், திருநெல்வேலி மாநகா் மாவட்ட காங்கிரஸ் தலைவா் கே.சங்கரபாண்டியன், பொருளாளா் ராஜேஷ் முருகன், மதுரை காா்த்திகேயன் உள்பட பலா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.