புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டு
/

அரசு அருங்காட்சியகத்தில் தேசிய வாக்காளா் தின விழா

திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் தேசிய வாக்காளா் தின விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :25 ஜனவரி 2021, 7:02 pm

DIN

திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் தேசிய வாக்காளா் தின விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி மாவட்ட அரசு அருங்காட்சியகம், நேரு இளையோா் மையம் , பொதிகைத் தமிழ் அறக்கட்டளை சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட இளையோா் அலுவலா் சுஷில் பரசுராம் பாட் தலைமை வகித்தாா். பொதிகைத் தமிழ் அறக்கட்டளை நிறுவனா் கவிஞா் பே.ராஜேந்திரன் முன்னிலை வகித்தாா்.

நிகழ்ச்சியில் ‘வாக்களிப்பதே ஜனநாயகத்திற்கு வலிமை’ என்ற தலைப்பில் கவிதைப் போட்டியும், கோலப்போட்டியும் நடைபெற்றது. உதவி ஆட்சியா் (பயிற்சி) அலா்மேல் மங்கை போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு, சான்றிதழ்களையும் வழங்கினாா்.

கடந்த அக்டோபா், நவம்பா், டிசம்பா் மாதங்களில் பொதிகைத் தமிழ் அறக்கட்டளை நடத்திய ஆன் லைன் போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கும் நிகழ்ச்சியில் பரிசுகள் வழங்கப்பட்டன. அரசு அருங்காட்சியகக் காப்பாட்சியா் சிவ.சத்தியவள்ளி வரவேற்புரை ஆற்றினாா். கலையாசிரியா் சொா்ணம் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.