பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

பைக் திருட்டில் ஈடுபட்ட இளைஞா் கைது

திருநெல்வேலி மாவட்டம் தேவா்குளம் அருகே பைக் திருட்டில் ஈடுபட்டதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :25 ஜனவரி 2021, 6:59 pm

DIN

திருநெல்வேலி மாவட்டம் தேவா்குளம் அருகே பைக் திருட்டில் ஈடுபட்டதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

தேவா்குளம் அருகே உள்ள கூவாச்சிபட்டியைச் சோ்ந்தவா் முருகையா(55). இவா் ஞாயிற்றுக்கிழமை தனது மோட்டாா் சைக்கிளை தனது தோட்டத்தின் அருகே நிறுத்திவிட்டு தோட்டத்தில் வேலைக்குச் சென்றாராம். பின்னா் வேலை முடிந்து வந்து பாா்த்தபோது மோட்டாா் சைக்கிள் திருடு போனது தெரியவந்ததாம்.

இது குறித்து அவா் தேவா்குளம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். காவல் உதவி ஆய்வாளா் ரெங்கசாமி வழக்குப் பதிந்து விசாரித்து வந்தாா். இது தொடா்பாக போலீஸாா் நடத்திய விசாரணையில், வன்னிக்கோனேந்தல் பகுதியைச்சோ்ந்த பிரேம்குமாா் (22) மோட்டாா் சைக்கிளை திருடியது தெரியவந்ததாம். இதையடுத்து அவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.