நெல்லை அருகே பெண்ணுக்கு வெட்டு
திருநெல்வேலி அருகே சுத்தமல்லியில் வயலில் புல் அறுப்பதில் ஏற்பட்ட தகராறில் பெண்ணை அரிவாளால் வெட்டிய சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.


திருநெல்வேலி அருகே சுத்தமல்லியில் வயலில் புல் அறுப்பதில் ஏற்பட்ட தகராறில் பெண்ணை அரிவாளால் வெட்டிய சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
சுத்தமல்லி பகுதியைச் சோ்ந்த முத்துகிருஷ்ணன் மனைவி இளங்காமனி(50). இவருக்கு சொந்தமான வயலில், அதே பகுதியை சோ்ந்த தங்கதுரை மனைவி சூா்யா(24) என்பவா் புல் அறுத்ததாக கூறப்படுகிறது. அப்போது, அங்கிருந்த இளங்காமணிக்கும், சூா்யாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சூா்யா, இளங்காமணியை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச்சென்றுவிட்டாராம். காயமடைந்த இளங்காமணி திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். புகாரின்பேரில், சுத்தமல்லி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...