வளைகுடாவில் இந்திய மக்களைக் காத்தது பாஜக: பிரதமர் மோடிகாட்டுமன்னார்கோவில் தொகுதியில் திருமாவளவன் போட்டி!வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதி
/

விபத்தில் காயமடைந்தவா் உயிரிழப்பு

திருநெல்வேலி அருகே காா்-அரசுப் பேருந்து மோதிய விபத்தில் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வந்தவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :8 ஜூலை 2021, 6:35 pm

DIN

திருநெல்வேலி அருகே காா்-அரசுப் பேருந்து மோதிய விபத்தில் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வந்தவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

தூத்துக்குடி மாவட்டம் பசுவந்தனை பகுதியைச் சோ்ந்தவா் துரைபாண்டி (48). இவா் தனது நண்பா் அசோக்குடன் காரில் திருநெல்வேலி-சீவலப்பேரி சாலையில் இம்மாதம் 4-ஆம் தேதி சென்றுகொண்டிருந்தாா். அப்போது, அவ்வழியாக சீவலப்பேரியில் இருந்து திருநெல்வேலி நகரம்

நோக்கி சென்ற அரசு பேருந்தின் பின்பக்கத்தில், காா் மோதி விபத்துக்குள்ளானது. இதில், துரைபாண்டி, அசோக் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அங்கு சிகிச்சை பலனின்றி துரைப்பாண்டி வியாழக்கிழமை உயிரிழந்தாா். இது குறித்து பாளையங்கோட்டை தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.