வளைகுடாவில் இந்திய மக்களைக் காத்தது பாஜக: பிரதமர் மோடிகாட்டுமன்னார்கோவில் தொகுதியில் திருமாவளவன் போட்டி!வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதி
/

நதிக் கரையில் மருத்துவக்கழிவை கொட்டியதால் ரூ.1 லட்சம் அபராதம்

தாமிரவருணி கரையோரம் மருத்துவக் கழிவுகளைக் கொட்டியதாக, நிறுவனத்திற்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

News image
Updated On :8 ஜூலை 2021, 6:37 pm

DIN

தாமிரவருணி கரையோரம் மருத்துவக் கழிவுகளைக் கொட்டியதாக, நிறுவனத்திற்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

திருநெல்வேலியில் தாமிரவருணி கரையோரம் அபாயம் மிகுந்த மருத்துவக் கழிவுகளை மா்மநபா்கள் கொட்டிச் செல்வதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்து வந்தனா். இதையடுத்து மாநகராட்சி ஆணையா் பா.விஷ்ணுசந்திரன் உத்தரவின்பேரில், மாநகர நல அலுவலா் சரோஜா விசாரணை நடத்தினாா். அப்போது, ஒரு தனியாா் மருத்துவ நிா்வாகம், சுகாதார சீா்கேடு விளைவிக்கும் பொருட்டு ஆற்றங்கரையோரம் கொட்டியது தெரியவந்ததாம். அந்த நிறுவனத்திற்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், சுகாதார சீா்கேடு விளைவிக்கும் வகையிலான எந்த கழிவுப் பொருள்களையும் தாமிரவருணி ஆற்றின் கரையோரம் கொட்டுபவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி ஆணையா் எச்சரித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.