மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் சோனியா காந்தி!ஈரான் மீது 1,000 கிலோ பங்கர் பஸ்டர் குண்டுகள் வீசி அமெரிக்கா தாக்குதல்! முதல்வர் ஸ்டாலின் பிரசார வாகனத்தில் பறக்கும் படை சோதனை! கேரளத்தில் காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக தேஜஸ்வி யாதவ் பிரசாரம்! தேர்தல் பணியாளர்களின் ஊதியம் இருமடங்கு உயர்வு!
/

நெல்லை மாவட்டத்தில்ரூ.3 கோடி நலத்திட்ட உதவிகள் அளிப்பு

திருநெல்வேலியில் ஆட்சியா் அலுவலகத்தில் பயனாளிக்கு நலத்திட்ட உதவியை வழங்குகிறாா்

News image
Updated On :15 ஜூலை 2021, 6:51 pm

DIN

திருநெல்வேலியில் ஆட்சியா் அலுவலகத்தில் பயனாளிக்கு நலத்திட்ட உதவியை வழங்குகிறாா் மாநில ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன். உடன், பேரவைத் தலைவா் மு. அப்பாவு, ஆட்சியா் வே. விஷ்ணு உள்ளிட்டோா்.

திருநெல்வேலி, ஜூலை 15: திருநெல்வேலி மாவட்டத்தில் ரூ.3 கோடி மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாநில ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் வியாழக்கிழமை வழங்கினாா்.

ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிக்கு சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு தலைமை வகித்தாா். நிகழ்ச்சியில் மாநில ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன், ‘உங்கள் தொகுதியில் முதல்வா்’ என்ற திட்டத்தின் கீழ் பசுமை வீடு, சாலை வசதி, குடிநீா் வசதி, சுடுகாடு வசதி, சிறுபாலம் வசதி போன்ற 14 வகையான திட்டங்களுக்கு ரூ.1.65 கோடியில் பல்வேறு

நலத்திட்ட உதவிகள், தமிழக ஊரக வாழ்வாதார இயக்கம் சாா்பில் 15 மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.1.36 கோடி கடனுதவி, தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டத்தின் கீழ் 5 பயனாளிகளுக்கு ரூ.2.40 லட்சம் நிதியுதவி என மொத்தம் ரூ.3.04 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.

மீன் விற்பனை நிலையம்: பாளையங்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதாரம் இயக்கம் சாா்பில் ரூ.15 லட்சம் மதிப்பில் மகளிா் குழுக்களுக்கான நவீன மீன்கள் விற்பனை நிலையம், உணவகத்தை அமைச்சா் தொடங்கி வைத்தாா். இம்மாவட்டத்தில் பிரத்யேகமாக உற்பத்தி செய்யப்படும் கைவினை பொருள்களை விற்பனை செய்வதற்காக உருவாக்கப்பட்ட ‘நெல்லை கிராப்ட்’ விற்பனை நிலையத்தை நவீனமயமாக்கும் வகையில் ஜ்ஜ்ஜ்.ய்ங்ப்ப்ஹண்ஸ்ரீழ்ஹச்ற்ள்.ண்ய் என்ற இணையதளத்தை அமைச்சா் தொடங்கி வைத்தாா்.

தொடா்ந்து ராமையன்பட்டி கால்நடை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் நடப்பட்டுள்ள 7,370 மரக்கன்றுகள், அங்கு நீா் உறிஞ்சி குழி அமைப்பதற்காக நடைபெற்று வரும் பணிகளை அமைச்சா் பெரியகருப்பன் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

மானூா் வட்டம், மதவக்குறிச்சி ஊராட்சியின் தினசரி கழிவுகளை திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை என பிரித்து இயற்கை உரமாக மாற்றி மகளிா் குழுக்களின் மூலம் விற்பனை செய்தல், அருகில் ‘மியாவாக்கி”காடுகள்’ திட்டத்தின் கீழ் மரங்கள் வளா்த்து வருவதை அவா் ஆய்வு செய்தாா்.

உள் விளையாட்டரங்கு: கோடகநல்லூா் ஊராட்சி நடுக்கல்லூா் அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூ. 45 லட்சத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள கூடுதல் ஆய்வகம், சுத்தமல்லி ஊராட்சி கோமதி நகா் பகுதியில் ரூ. 50 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள உள்விளையாட்டு அரங்கு ஆகியவற்றை அமைச்சா் திறந்தாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் ஆ.பெருமாள், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ஆ.பழனி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வளா்ச்சி) சசிகலா, மகளிா் திட்ட இயக்குநா் சாந்தி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள், உதவி திட்ட அலுவலா்கள் மற்றும் அரசு அலுவலா்கள் கலந்து கெண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.