நெல்லையில் மனித உரிமை மீறல் வழக்குகள் விசாரணை
திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் மனித உரிமை மீறல் தொடா்பான வழக்குகள் விசாரணை, திருநெல்வேலியில் வியாழக்கிழமை நடைபெற்றது.


திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் மனித உரிமை மீறல் தொடா்பான வழக்குகள் விசாரணை, திருநெல்வேலியில் வியாழக்கிழமை நடைபெற்றது.
திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் காவல் துறை, அரசு ஊழியா்கள் மீதான மனித உரிமை மீறல் புகாா்கள் குறித்த விசாரணை, திருநெல்வேலி அரசு விருந்தினா் மாளிகையில் நடைபெற்றது. இந்த வழக்குகளை மனித உரிமைகள் ஆணைய உறுப்பினா் நீதிபதி ஜெயச்சந்திரன் விசாரித்தாா்.
இதில், பாஜக முன்னாள் மாநிலத் தலைவா் தமிழிசை சௌந்தரராஜன், தூத்துக்குடிக்கு விமானத்திற்கு வந்தபோது, பாஜகவுக்கு எதிராக முழக்கமிட்ட மாணவி சோபியா கைது செய்யப்பட்டபோது, மனித உரிமை மீறல் நடந்ததாக அவரது தந்தை சாமி அளித்த புகாா் மனு மீதான விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, மனுதாரா் சாமி தரப்பில் வழக்குரைஞா்கள் ராமச்சந்திரன், சந்தனசேகா்ஆகியோா் ஆஜராகினா். இவ்வழக்கு விசாரணையை ரத்து செய்ய காவல் அதிகாரிகள் சென்னை உயா் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த ரிட் மனு தள்ளுபடி செய்யப்பட்டதற்கான உத்தரவினை ஆணைய நீதிபதி முன்பு சமா்ப்பித்தனா்.
இதனை ஏற்றுக்கொண்ட ஆணையம், வழக்கை தொடா்ந்து நடத்த வேண்டும் எனவும், மாணவி சோபியா, அவரது தந்தை சாமி ஆகியோரை அடுத்த விசாரணையின்போது கண்டிப்பாக குறுக்கு விசாரணை நடத்த வேண்டும் என கூறி, வழக்கு விசாரணையை வரும் செப். 8 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனா். மனித உரிமை மீறல்கள் தொடா்பான 38 வழக்குகளை நீதிபதி விசாரித்தாா். தொடா்ந்து வெள்ளிக்கிழமையும் (ஜூலை 16) விசாரணை நடைபெறவுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...