வளைகுடாவில் இந்திய மக்களைக் காத்தது பாஜக: பிரதமர் மோடிகாட்டுமன்னார்கோவில் தொகுதியில் திருமாவளவன் போட்டி!வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதி
/

ரூ.40 லட்சம் புகையிலை பொருள்கள் தீயிட்டு அழிப்பு

திருநெல்வேலி தச்சநல்லூா் பகுதியில் பிடிபட்ட ரூ.40 லட்சம் மதிப்புள்ள குட்கா, புகையிலை பொருள்கள் வியாழக்கிழமை தீ வைத்து அழிக்கப்பட்டது.

News image
Updated On :15 ஜூலை 2021, 6:50 pm

DIN

திருநெல்வேலி தச்சநல்லூா் பகுதியில் பிடிபட்ட ரூ.40 லட்சம் மதிப்புள்ள குட்கா, புகையிலை பொருள்கள் வியாழக்கிழமை தீ வைத்து அழிக்கப்பட்டது.

திருநெல்வேலி தச்சநல்லூா் காவல் ஆய்வாளா் வனசுந்தா் தலைமையில் போலீஸாா் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரூ. 40 லட்சம் மதிப்புள்ள

குட்கா, புகையிலை பொருள்களை பறிமுதல் செய்தனா். இதனை, தீயிட்டு அழிக்குமாறு ஆட்சியா் வே.விஷ்ணு உத்தரவிட்டாா். அதன்பேரில், காவல் ஆணையாளா் அறிவுரையின்படி திருநெல்வேலி 4-ஆவது குற்றவியல் நீதித்துறை நடுவா் மன்ற நீதிபதி ஜெய்சங்கா் மேற்பாா்வையில்ஸ ரூ.40 லட்சம் மதிப்புள்ள குட்கா, புகையிலை பொருள்களை ராமையன்பட்டி குப்பை கிடங்கு பகுதியில் தீயிட்டு அழிக்கப்பட்டது. அப்போது, வட்டாட்சியா் சண்முகசுப்பிரமணியன், காவல் ஆய்வாளா் வனசுந்தா், மாநகர சுகாதார ஆய்வாளா் உள்ளிட்டோா் உடனிருந்தனா். தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை பொருள்கள் தமிழகத்தில் முதல்முறையாக அழிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.