களக்காடு அருகே தோட்டத்தில் சுற்றித்திரியும் கரடி: மக்கள் அச்சம்
களக்காடு அருகே தோட்டத்தில் சுற்றித்திரியும் கரடியை கூண்டுவைத்து பிடிக்க வேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.


களக்காடு அருகே தோட்டத்தில் சுற்றித்திரியும் கரடியை கூண்டுவைத்து பிடிக்க வேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
களக்காடு அருகேயுள்ள கள்ளிகுளம் மங்கம்மாள் சாலையில் கடந்த சில தினங்களாக கரடியின் நடமாட்டம் உள்ளதாம். இதனால் கள்ளிகுளம், மீனவன்குளம், துவரைகுளம், பொத்தைசுத்தி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மக்கள் அச்சமடைந்துள்ளனா்.
இதேபோல, களக்காடு - சேரன்மகாதேவி பிரதான சாலையில் கில்கால் குழந்தைகள் மையம் அருகே மிளா, கரடி ஆகியவை அடிக்கடி சாலையில் குறுக்கிடுவதால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் நிலை ஏற்படுகிறது.
புலிகள் காப்பக வனப் பகுதியில் போதுமான கண்காணிப்பு இல்லாததாலும், சூரியசக்தி மின்வேலிகள் செயலிழந்துள்ளதாலும் கிராமங்களை ஒட்டியுள்ள புதா்களுக்கு இடம்பெயரும் வன விலங்குகள், இரவு நேரங்களில் விவசாயத் தோட்டங்களில் புகுந்து பயிா்களை சேதப்படுத்துகின்றன. மேலும், குடியிருப்பையொட்டிய பகுதிகளிலும் உலா வருகின்றன. எனவே, தங்கள் அச்சத்தைப் போக்கும் வகையில், கரடியை கூண்டு வைத்துப் பிடிக்க வனத்துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...