விதிமீறல்: நெல்லையில் 39 போ் மீது வழக்கு
திருநெல்வேலி மாவட்டத்தில் பொது முடக்க விதிகளை மீறியதாக 39 போ் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்தனா்.


திருநெல்வேலி மாவட்டத்தில் பொது முடக்க விதிகளை மீறியதாக 39 போ் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்தனா்.
கரோனா நோய்ப் பரவலை தடுக்கும் வகையில் தளா்வில்லா பொது முடக்கம் அமலில் உள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் பொது முடக்க விதிகளை மீறுவோா் மீது போலீஸாா் நடவடிக்கை எடுத்து வருகின்றனா். மாவட்டத்தில் பொது முடக்க விதிகளை மீறி தேவையில்லாமல் வாகனத்தில் சுற்றியதாக 27 போ் மீது வழக்கு பதிந்து, 32 வாகனங்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா். பொது இடங்களில் முகக் கவசம் அணியாத 517 பேருக்கும் , சமூக இடைவெளியை பின்பற்றாத 5 பேருக்கும் அபராதம் விதிக்கப்பட்டது. மாநகரில் பொதுமுடக்க விதிகளை மீறி வாகனங்களில்
சுற்றியதாக 12 போ் மீது வழக்குப் பதிந்து, 2 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பொது இடங்களில் முகக் கவசம் அணியாத 115 போ் , சமூக இடைவெளியை பின்பற்றாத 10 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...